மத்திய அரசுக்கு 2,000 ரூபாய்க்கு 4ஜி ஸ்மார்ட்போன் வேண்டுமாம்..!

இந்தியாவில் மொபைல் பயனாளர்கள் எண்ணிக்கை எப்போதும் இல்லாத வகையில் கடந்த 2 ஆண்டுகளாக மிக வேகமாக வளர்ந்து வருகிறது.

இந்நிலையில், நாட்டு மக்கள் அனைவரும் 4ஜி சேவையைப் பயன்படுத்தும் அளவிற்குத் திறன்வாய்ந்த, விலை மலிவான ஸ்மார்ட்போனை வெறும் 2000 ரூபாயில் தயாரிக்க முடியுமா என மத்திய அரசு கேள்வியை எழுப்பியுள்ளது.

மத்திய அரசின் இந்தக் கேள்வியை இந்திய மொபைல் தயாரிப்பு நிறுவனங்களுக்கு மிகப்பெரிய வாய்ப்பாக அமைந்துள்ளது மட்டும் அல்லாமல் இரு நிறுவனங்கள் மத்திய அரசின் முக்கிய அதிகாரிகளையும் சந்திக்கவும் உள்ளனர்.

நாங்கள் தயார்..

நாங்கள் தயார்..

இந்தியாவைத் தலைமையிடமாகக் கொண்டு மொபைல் தயாரிக்கும் கார்பன் மற்றும் இன்டக்ஸ் ஆகிய நிறுவனங்கலள் மத்திய அரசு கூறும் 2,000 ரூபாய் மதிப்பிற்கு 4ஜி ஸ்மார்ட்போனை தயாரிக்க முடியும் எனத் தெரிவித்துள்ளது.

ஆனால் இது உற்பத்தி எண்ணிக்கையைப் பொறுத்தது என்றும் இரு நிறுவனங்கள் தெரிவித்துள்ளது.

 

நிட்டி அயோக்

நிட்டி அயோக்

மத்திய அரசின் புதிய திங்க் டேங்க் அமைப்பான நிட்டி அயோக், சமீபத்தில் உள்நாட்டு மொபைல் தயாரிப்பு நிறுவனங்களான கார்பன், லாவா, இன்டெக்ஸ் மற்றும் மைக்ரோமாக்ஸ் நிறுவனத்துடன் நடத்திய கூட்டத்தில் குறைந்த விலைமதிப்புடைய 4ஜி ஸ்மார்ட்போன் குறித்து அதிகளவில் விவாதம் செய்தது.

கார்பன் மொபைல்ஸ்

கார்பன் மொபைல்ஸ்

இந்நிலையில் கார்பன் மொபைல்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரான பிரதீப் ஜெயின் கூறுகையில், அடுத்தச் சில மாதங்களில் விலைக்குறைவான மொபைல்போன் தயாரிப்புக்கான மாதிரியை அளிக்க நாங்கள் தயார், ஆனால் மத்திய அரசிடம் இருந்து சில முக்கிய விளக்கமும், அரசு இத்திட்டத்திற்கு எந்த அளவிற்கு ஒத்துழைக்கும் என்பதை நாங்கள் தெரிந்துகொள்ள விரும்புகிறோம் என்று அவர் கூறினார்.

டிஜிட்டல் இந்தியா

டிஜிட்டல் இந்தியா

மத்திய அரசு பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பின் இந்திய முழுவதும் டிஜிட்டல் பரிமாற்றங்களை ஆதரித்து வரும் நிலையில், டிஜிட்டல் பரிமாற்றங்களுக்கு முதலும் முக்கிய ஆதாரமாய் விளங்கும் மொபைல் அல்லது ஸ்மார்ட்போனை மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்க வேண்டும் என்பதே நிட்டி அயோக்.

இதுவே டிஜிட்டல் இந்தியாவிற்கு அடித்தளமாக அமையும்.

 

சவால்கள்

சவால்கள்

தற்போது ஸ்மார்ட்போன் சந்தையில் இருக்கும் போட்டியின் காரணமாக, விலை குறைவான போனைத் தயாரிப்பதன் மூலம் வாடிக்கையாளர் பயன்பாட்டு அனுபவத்தில் குறைபாடு வரலாம்.

மேலும் இதில் பேட்டரி திறன், கேமிரா தெளிவுத்தன்மை, பிராசர், திரை அளவுகள் மற்றும் கட்டமைப்பு அளவுகள் ஆகியவை வாடிக்கையாளர்களுக்குத் திருப்தி அளிக்கும் வகையில் இருக்க வேண்டும், இது மிகப்பெரிய சவாலாகப் பார்க்கிறார் பிரதீப் ஜெயின்.

 

இன்டெக்ஸ்

இன்டெக்ஸ்

ஏற்கனவே 2000 ரூபாய்க்கு ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்து வருகிறது இன்டெக்ஸ், ஆனால் அது 2ஜி போன். தற்போது 4ஜி சேவைக் கொண்ட போனைத் தயாரிப்பதில் சில சவால்கள் இருப்பதாகத் தெரிகிறது என இன்டெக்ஸ் நிறுவனத்தின் தலைவர் நிதி மார்கன்டே தெரிவித்துள்ளார்.

 எதிர்காலத் தேவை

எதிர்காலத் தேவை

இந்தியாவில் 3ஜி மற்றும் 4ஜி பயன்பாடுகள் அதிகரித்துள்ள நிலையில் எதிர்காலத் தேவையைப் பூர்த்திச் செய்யும் அளவில் நோக்கில் நிட்டி அயோக் இத்திட்டத்தை இந்திய மொபைல் தயாரிப்பாளர்கள் மத்தியில் விவாதம் செய்துள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+