ரூ.10லட்சம் டெப்பாசிட் செய்த 1.5 லட்சம் பேர்.. வருமான வரித்துறை அதிரடி ஆய்வு..15 நாட்கள் கெடு..!

நவம்பர் 8ஆம் தேதிக்குப் பின் அதாவது இந்தியாவில் பணமதிப்பிழப்பு நடவடிக்கை அமல் செயப்பட்ட பின்பு 1.5 லட்சம் வங்கி கணக்குகளில் 10 லட்சம் மற்றும் அதற்கு அதிகமாக டெப்பாசிட் செய்யப்பட்டுள்ளதை வருமான வரித்துறையின் புதிய ஆய்வு முறையில் கண்டுபிடித்துள்ளது.

இந்நிலையில் நாளை முதல் வருமான வரித்துறை வங்கி கணக்கில் 10 லட்சம் மற்றும் அதற்கு அதிகமான தொகையை டெப்பாசிட் செய்தவர்களிடம் நேரடியாகக் கேள்வி கேட்ட உள்ளது.

புதிய வலை

புதிய வலை

மத்திய நேரடி வரி அமைப்பு அமைத்துள்ள புதிய ஆய்வு தளத்தின் வாயிலாக, நவ8-க்குச் சேகரிக்கப்பட்ட அனைத்துத் தகவல்களைக் கொண்டு 10 லட்சம் மற்றும் அதற்கு அதிகமாகப் பணத்தை டெப்பாசிட் செய்தவர்கள் 1.5 லட்சம் பேர் எனக் கணக்கிட்டுள்ளது.

நேரடி விசாரணை

நேரடி விசாரணை

இந்நிலையில் புதிய ஆய்வு தளத்தின் வாயிலாகவே, மத்திய நேரடி வரி அமைப்பு டெப்பாசிட் செய்யப்பட்ட வங்கி கணக்கின் உரிமையாளர்களிடம் நேரடியாகத் தொடர்பு கொண்டு வருமானத்திற்கான ஆதாரத்தைத் தெரிவிக்க வேண்டும்.

வருமான குறித்த தகவல்களை மின்னணு படிவித்தில் பதிவு செய்து, அதனை மின்னணு வாயிலாகவே அப்லோடு செய்யவேண்டும். இதன் மூலம் வெளிப்படைத் தன்மை அதிகரிக்கும் என மாநில வரித்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.

 

15 நாட்கள்

15 நாட்கள்

மேலும் இந்தக் கேள்விகளுக்கு அடுத்த 15 நாட்களுக்குள் பதில் அளிக்க வேண்டும் இல்லை என்றால் வங்கி கணக்கில் இருக்கும் பணத்தைக் கூட வருமான வரித்துறை முடக்க வாய்ப்பு மட்டுமில்லை உரிமையும் உண்டு.

ரெய்டு

ரெய்டு

மேலும் கடந்த 2 மாதத்தில் வருமான வரித்துறையினர் செய்த அதிரடி சோதனைகளில் சுமார் 600 கோடி ரூபாய் சிக்கியுள்ளதாகவும், அதில் 150 கோடி ரூபாய் புதிய ரூபாய் நோட்டுகளையும் வருமான வரித்துறையினர் கைப்பற்றியுள்ளனர். மேலும் 1,100 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

வங்கி கணக்குகள்

வங்கி கணக்குகள்

வருமான வரித்துறை செய்த ஆய்வில் 1.5 லட்சம் வங்கி கணக்கில் 10 லட்சம் மற்றும் அதற்கு அதிகமாகப் பணம் செய்யப்பட்டுள்ளது, மேலும் 75 பேருக்குச் சொந்தமான 1 கோடி வங்கிக் கணக்கில் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் பணம் டெப்பாசிட் செய்யப்பட்டுள்ளது என்று வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.

மேலும் ஆய்வுக்கு உட்பட்ட வங்கிக்குக் கணக்குகளில் வைப்புச் செய்யப்பட்ட தொகையின் வாயிலாக மத்திய அரசுக்கு 50,000 கோடி ரூபாய் வரி வருமான கிடைக்கும்.

 

4 மாநிலங்கள்

4 மாநிலங்கள்

மகாராஷ்டிரா, குஜராத், தமிழ்நாடு, மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களில் கூட்டுறவு வங்கிகளின் வாயிலாக அதிகளவிலான தொகை வைப்பு செய்யப்பட்டுள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+