அடி மேல் அடி வாங்கிய பிளிப்கார்ட் நிறுவனத்திற்கு 'இடி' விழுந்தது..!

டி ரோவே நிறுவனத்தைப் போன்றே பிளிப்கார்ட் நிறுவனத்தில் முதலீடு செய்துள்ள மார்கன் ஸ்டான்லி நிறுவனமும் 38 சதவீதம் குறைத்து 5.6 பில்லியன் டாலர்களாக நவம்பர் மாதம் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

மியூச்சுவல் ஃபண்டு நிறுவனமான டி ரோவே பெங்களூரை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் பிளிப்கார்ட் நிறுவனத்தில் உள்ள தனது முதலீடுகளின் மதிப்பை 4 சதவீதம் வரை குறைத்து 9.9 பில்லியன் டாலர்களாக அறிவித்துள்ளது.

டி ரோவே நிறுவனத்தைப் போன்றே பிளிப்கார்ட் நிறுவனத்தில் முதலீடு செய்துள்ள மார்கன் ஸ்டான்லி நிறுவனமும் நவம்பர் மாதம் 38 சதவீதமாக குறைத்தது.

சென்ற ஆண்டு பிளிப்கார்ட்டின் நிலை

சென்ற ஆண்டு பிளிப்கார்ட்டின் நிலை

2015-ம் ஆண்டு முதலீடுகளைப் பெற்ற பிளிப்கார்ட் நிறுவனத்தின் பங்குகளின் மதிப்பு 142.24 பில்லியன் டாலர்களாக இருந்தது. இதுவே செப்டம்பர் மாதம் 96.29 டாலராகவும், டிசம்பர் மாதம் 93.15 டாலர்களாகவும் இருந்தது.

இப்போது இந்த மதிப்பு குறைப்பால் பிளிப்கார்ட் நிறுவனத்திற்கும் மேலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 2016-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் பிளிப்கார்ட் நிறுவனத்தின் பங்குகளின் விலை தொடர்ந்து சரிவைச் சந்தித்து வருகின்றது.

பதில் ஏதும் இல்லை

பதில் ஏதும் இல்லை

பிளிப்கார்ட் நிறுவத்திடம் இதற்கு முன்பு பங்குகளின் மதிப்புகள் குறையும் போது கேட்கும் போது எல்லாம் புதிய முதலீடுகள் கொண்டு வருவதற்கான பணிகள் நடக்கின்றன என்று பதில் அளிக்கும். ஆனால் இந்த முறை அனுப்பப்பட்ட மின்னஞ்சல்களுக்குப் பதில் ஏதும் இல்லை.

அமேசான் நெருக்கடி

அமேசான் நெருக்கடி

பிளிப்கார்ட் நிறுவனம் அமேசான் நிறுவனத்திடம் இருந்தும் பெரும் பிரச்சனையைச் சந்தித்து வருகின்றது. அன்மையில் அமேசான் நிறுவனம் 6 பில்லியன் டாலர்களை இந்தியாவில் முதலீடு செய்வதாக அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

சிஈஓ மாற்றம்

சிஈஓ மாற்றம்

2017-ம் ஆண்டு துவக்கத்தில் பிளிப்கார்ட் நிறுவனத்தின் புதிய தலைமை செயல் அதிகாரியாக டைகர் குளொபல் நிறுவனத்தின் நியூ யார்க் பிறிவின் முன்னால் நிர்வாகி கல்யாண் கிருஷ்ணமூர்த்தி பொறுப்பேற்றார். டைகர் குளொபல் நிறுவனமும் பிளிப்கார்ட் நிறுவனத்தில் முதலீடு செய்திருக்கின்றது.

இணை இயக்குநர்களின் நிலை

இணை இயக்குநர்களின் நிலை

பிளிப்கார்ட் நிறுவனத்தின் இணை இயக்குநர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட இணை நிறுவனர் பின்னி பன்சால் தலைமை செயல் அதிகாரிகள் குழுவில் ஒருவராக நியமிக்கப்பட்டார். மாற்றொரு இணை இயக்குநரான சச்சின் பன்சால் நிர்வாக தலைவர் பதவியில் தொடர்ந்து நீடிக்கிறார்.

முக்கிய நிர்வாகிகள்

முக்கிய நிர்வாகிகள்


பிளிப்கார்ட் நிறுவனத்தின் இந்த மறுசீராய்வு அறிவிப்பு வெள்வந்த உடன் இ-கார்ட் பிரிவு தலைவர் சாய்கிரன் கிருஷ்ணமூர்த்தி, பொருட்கள் பிரிவு தலைவர் சுரோஜித் சாட்டர்ஜி மற்றும் தலைமை மார்க்கெட்டிங் அதிகாரி சமர்தீப் சுபானந்த் ஆகிய மூன்று முக்கிய நிர்வாகிகள் நிறுவனத்தை விட்டு வெளியேறினர்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+