அருண் ஜேட்லியின் அணி.. பட்ஜெட்டுக்கு பின்னால் இருக்கும் மூளை..!

இந்த வருடம் பட்ஜெட் தயாரிப்பிலும் சரி, நாட்டின் வளர்ச்சி காரணிகளும் சரி, அதில் உள்ள இடர்பாடுகளும் சரி 2017ஆம் ஆண்டில் மிகவும் அதிகம். இவை அனைத்திற்கும் காரணம் மோடியின் பணமதிப்பிழப்பு எனச் சில வர்த்தக ஆய்வு அமைப்புகள் கூறினாலும், உண்மை அவை இல்லை.

அமெரிக்காவில் டொனால்டு டிரம்பர் வெற்றி, ஐரோப்பாவில் இருந்து பிரிட்டன் வெளியேறியது, ஜப்பான் நாட்டின் பொருளாதாரச் சரிவு, சீனாவின் வர்த்தகப் பாதிப்புகள் எனப் பல காரணிகளை இந்திய பொருளாதாரம் பாதித்து வருகிறது. இவை அனைத்திற்கும் மேலாக உள்நாட்டு வர்த்தகச் சந்தையில் ஏற்படும் மாற்றங்களையும் கவனிக்க வேண்டிய நிலையில் உள்ளது நிதியமைச்சகம்.

இத்தகைய சூழ்நிலையில் 2017-18ஆம் ஆண்டிற்கான பொருளாதார வளர்ச்சிக்குச் சரியான பட்ஜெட் அறிக்கையை வடிவமைக்க நிதியமைச்சர் அருண் ஜேட்லிக்கு ஒரு சிறந்த அணி உள்ளது. அவர்கள் யார் என்பதேயே நாம் இப்போது பார்க்கப்போகிறோம்.

அசோக் லாவாசா

அசோக் லாவாசா

1980ஆம் ஆண்டு ஹரியான பேட்ச் ஐஏஎஸ் அதிகாரிகளில் ஒருவரான அசோக் லாவாசா, தற்போது நிதித்துறை செயலாளராக உள்ளார். இவர் முந்தை காங்கிரஸ் அரசில் சுற்றுச்சூழல் துறையில் பல முக்கிய நடவடிக்கைகளை எடுத்தார்.

இவர் 2017-18ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் அறிக்கை தயாரிப்பில் முக்கிய அதிகாரியாக விளங்குகிறார்.

 

சக்திகாந்த தாஸ்

சக்திகாந்த தாஸ்

அருண் ஜேட்லியின் இந்தச் சிறப்பு அணியில் பட்ஜெட் குறித்து அதிகம் தெரிவந்தவர் என்றால் அது சக்திகாந்த தாஸ் என்று கூறலாம். பல வருடங்களாகப் பட்ஜெட் தயாரிக்கும் குழுவில் சக்திகாந்த தாஸ் இடம்பெற்று வருகிறார். மேலும் இவர் செயல்பாடுகள் சிறப்பானதாக இருக்கும் என்று பல முக்கிய அமைச்சர்கள் பலமுறை தெரிவித்தனர்.

இவர் தற்போது பொருளாதார விவகார துறையின் செயலாளராக உள்ளார்.

 

ஹஷ்முக்த் ஆதியா

ஹஷ்முக்த் ஆதியா

நரேந்திர மோடியின் சொந்த ஊர்க்காரரான ஹஷ்முக்த் ஆதியா மோடியின் நற்பெயர் பெற்றவர். நேரடி வரி விதிப்பில் பல முக்கிய மாற்றங்கள் மற்றும் பட்ஜெடில் வெளியாக உள்ள வரி குறித்த முக்கிய மாற்றங்கள் அனைத்திற்கும் ஹஷ்முக்த் ஆதியா முக்கியமானவர்.

இவர் வருவாய் துறையின் முக்கியச் செயலாளர்.

 

நீராஜ் குமார் குப்தா

நீராஜ் குமார் குப்தா

மத்திய அரசின் பங்கு இருப்புகளைக் குறைத்து நாட்டின் வளர்ச்சிக்காக நிதிதிரட்டும் பணிகளில் முக்கியப் பங்காற்றியவர் நீராஜ் குமார் குப்தா. மேலும் லாபம் அளிக்கும் நிறுவனங்களின் பங்கு வாங்கியதில் மத்திய அரசுக்கு 15,982 கோடி ரூபாய் லாபம் கிடைத்துள்ளது.

இவரும் பட்ஜெட் தயாரிக்கும் குழுவில் முக்கியப் பங்காற்றி வருகிறார். இவர் முதலீட்டு மற்றும் பொதுத்துறை சொத்து மேலாண்மை துறையின் செயலாளர்.

 

அரவிந்த் சுப்பிரமணியன்

அரவிந்த் சுப்பிரமணியன்

இவரைப் பற்றி நமக்கு அறிமுகம் தேவையில்லை.

மத்திய அரசின் தலைமை பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்பிரமணியன், இவர் பட்ஜெட் அறிக்கையைத் தயாரிப்பதிற்கு முதுகெலுப்பாக இருப்பவர்.

 

அன்ஜூலி சிபி டுக்கால்

அன்ஜூலி சிபி டுக்கால்

நாட்டின் பணமதிப்பிழப்பு அமலுக்கு வந்த பின் மத்திய அரசின் டிஜிட்டல் பரிமாற்றங்கள் மற்றும் பணமில்லா பொருளாதாரத்தை உருவாக்கும் பணிகளைச் செவ்வெனச் செய்துவரும் அதிகாரிதான் அன்ஜூலி சிபி டுக்கால்.

தற்போதைய நிலையில் பட்ஜெட் தயாரிப்புக்கு இவரது முக்கியத்துவம் உங்களுக்குப் புரிந்திருக்கும்.

 

ஏ-டீம்

ஏ-டீம்

இதுதான் 2017-18ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் தயாரிப்பில் ஈடுபட்டு இருக்கும் அணி. இவர்கள் அனைவரும் நிதியமைச்சர் அருண் ஜேட்லி தலைமையாக இருக்கிறார்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+