அறிவித்த அடுத்த நாள் முதல் தொடர்ந்து வங்கிகள் ஹோம் லோன் மீதான வட்டி விகிதத்தைக் குறைக்கத் துவங்கினர்.
புத்தாண்டு தினத்தன்று பிரதமர் மோடி நடுத்தர வற்கம் மற்றும் ஏழை வற்கம் இருவரும் மிகவும் கடினமாக உழைக்கின்றனர். எனவே அவர்களுக்குக் கடன் அளித்து உதவ வேண்டும் என்று அறிவித்தார்.
அவர் இப்படி அறிவித்த அடுத்த நாள் முதல் தொடர்ந்து வங்கிகள் ஹோம் லோன் மீதான வட்டி விகிதத்தைக் குறைக்கத் துவங்கினர்.
ஸ்டேட் பாங்காப் இந்தியா
வட்டி விகிதத்தை முதல் முறையாகக் குறைத்த ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா 9.1 சதவீதமாக இருந்த வட்டி விகிதத்தை 0.45 சதவீதம் குறைத்து 8.65 சதவீதமாக அறிவித்தது. அதே நேரம் பெண்களுக்கு 8.60 சதவீதமாகக் குறைத்தது.
எச்டிஎஃப்சி வங்கி
எச்டிஎப்சி வங்கியில் 9.1 சதவீதமாக இருந்த வட்டி விகிதம் 75 லட்சம் வரையில் 8.75 சதவீதமாகவும் இதுவே பெண்களுக்கு மேலும் 0.05 சதவீதம் வரை கூடுதலாகவும் வட்டி விகிதம் குறைக்கப்பட்டுள்ளது.
ஐசிஐசிஐ வங்கி
9.1 சதவீதமாக இருந்த வட்டி விகிதத்தில் 0.45 சதவீதம் குறைத்து 8.65 சதவீதமாக வட்டி விகிதத்தை அறிவித்துள்ளது ஐசிஐசிஐ வங்கி.
ஆக்ஸிஸ் வங்கி
8.9 சதவீதமாக இருந்த வட்டி விகிதத்தில் இருந்து 0.65 முதல் 0.70 சதவீதம் வரை வட்டி விகிதத்தைக் குறைத்து 8.25 சதவீதமாக ஒரு வருடத்திற்கு ஆக்ஸிஸ் வங்கி அறிவித்துள்ளது.
சிட்டி பாங்க் ஆப் இந்தியா
2017 ஜனவரி 9 வரை 9.50 சதவீதமாக இருந்த வட்டி விகிதத்தை 9.50 சதவீதமாக இருந்த வட்டி விகிதத்தை 8.80 சதவீதமாகக் குறைத்து அறிவித்தது.
பாங்க் ஆப் பரோடா
9.05 சதவீதமாக இருந்த பாங்க் ஆ பரோடாவின் ஹோம் லோன் வட்டி விகிதம் 0.75 புள்ளிகள் குறைத்து 8.20 சதவீதம் முதல் 8.35 சதவீதம் வரை வட்டி விகிதத்தை அறிவித்துள்ளது.
யூனியன் பாங்க் ஆப் இந்தியா
8.90 சதவீதமாக இருந்த ஹோம் லோன் வட்டி விகிதத்தை 8.15 சதவீதம் மற்றும் 8.10 சதவீதமாக வட்டி விகிதத்தைக் குறைத்துள்ளது.
தீனா பாங்க்
9.30 சதவீதமாக இருந்த வட்டி விகிதத்தில் 0.75 சதவீதத்தைக் குறைத்து 8.55 சதவீதமாகக் குறைத்து அறிவித்துள்ளது.
கோடாக் மகேந்திரா பாங்க்
கோடாக் மகேந்திரா பாங்க் ஹோம் லோன் வட்டி விகிதத்தில் இருந்து 9.30 சதவீதமாக இருந்த வட்டி விகிதம் 0.75 சதவீதம் குறைக்கப்பட்டு 8.55 சதவீதமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கனாரா வங்கி
9.15 சதவீதமாக இருந்த கனாரா வங்கியின் வட்டி விகிதத்தில் 0.70 சதவீதம் குறைத்து 8.45 சதவீதமாகக் கனரா வங்கி அறிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications