பிஎச்ஐஎம் செயலி பயன்படுத்தி மொபைல் மூலம் விரைவாகவும், எளிதாகவும் டிஜிட்டல் முறையில் பண பரிமாற்றம் செய்யலாம்.
பெறும் மதிப்புடைய 500 ரூபாய் மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளைச் செல்லாது என்று பிரதமர் மோடி அறிவித்த பிறகு டிஜிட்டல் பண பரிமாற்ற முறையைச் செய்ய மத்திய அரசு மக்களை வலியுறுத்தியது. இதற்காக டிசம்பர் மாதம் இறுதியில் பிஎச்ஐஎம் செயலியை மோடி வெளியிட்டார்.

பிஎச்ஐஎம் செயலியை மோடி வெளியிட்டதில் இருந்து 20 நாட்களில் 1.1 கோடி முறை பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் ரவி ஷங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.
பிஎச்ஐஎம் செயலி பயன்படுத்தி மொபைல் மூலம் விரைவாகவும், எளிதாகவும் டிஜிட்டல் முறையில் பண பரிமாற்றம் செய்யலாம். யூபிஐ மற்றும் யுஎஸ்எஸ்டி பண பரிவர்த்தனை முறையை பிஎச்ஐஎம் எளிமையாக்குகின்றது.
விரைவில் அனைத்து மொபைல் நிறுவங்களின் தயாரிப்புகளிலும் டிஃபால்டாக இந்தச் செயலி இருக்கும் என்றும் விரைவில் ஐ ஓஎஸ் மொபைல் போன்களுக்கும் பிஎச்ஐஎம் செயலி வெளியிடப்படு என்றும் நிதி ஆயோக் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி அமிதாப் காந்த் தெரிவித்துள்ளார்.
அமிதாப் காந்த் செய்துள்ள டிவிட்டில் இறுதிக் கட்ட தொழில்நுட்ப சோதனை பணிகள் செய்யப்பட்டு வருவதாகவும், வியாபாரிகளிடம் பிஎச்ஐஎம் செயலி பெரிய அளவில் சென்று சேர்ந்துள்ளதாகவும் QR குறியீட்டின் மூலமும் வியாபாரிகள் எளிதாக பணத்தை பெற இயலும் என்று காந்த் தெரிவித்துள்ளார்.
இருப்பினும், நரேந்திர மோடி அரசு மேலும் தோழில்நுட்பத்தில் நிறைய மாற்றங்களுடன் இடைவிடாத இணையதள பண பரிவர்த்தனை சேவைகள் வழங்க முயற்சிசெய்து வருகின்றது.
ஆதார் மூலம் பண பரிவர்த்தனை செய்வதற்கான பணிகள் இறுதி காட்டத்திற்கு வந்துள்ளதாகவும், இந்த பண பரிவர்த்தனை முறை பயன்பாட்டிற்கு வரும் போது மொபைல் போன் கூடத் தேவைப்படாது என்றும் இதற்காக ஆர்பிஐ மற்றும் எஸ்பிஐ உட்பட பிற வங்கிகளிடம் ஏற்கனவே தெளிவுபடுத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
இதற்காக வாடிக்கையாளர்களுக்கு ஆதார் இணைக்கப்பட்ட ஒரே ஒரு வங்கி கணக்கு மட்டும் தேவை. ஏற்கனவே 40 கோடி வங்கி கணக்குடன் ஆதார் அட்டை இணைக்கப்பட்டுள்ளது. வியாபாரிகள் ஆதார் அட்டை உள்ளிடுவதற்கு ஸ்மார்ட் போன் மட்டும் போதும் என்று பிரசாத் கூறினார்.
More From GoodReturns

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!



Click it and Unblock the Notifications