மொபிகிவிக் பணப் பரிமாற்றம் கொண்ட பெட்ரோல் பங்குகளில், 20 மற்றும் 23ஆம் தேதி நீங்கள் பெட்ரோலுக்காகக் கொடுக்கப்படும் பணத்தை 100 சதவீதம் கேஷ்பேக் அளிப்பதாக மொபிகிவிக் தெரிவித்துள்ளது.
இந்தச் சலுகையை நீங்கள் பெற, பெட்ரோல் பங்க்-இல் இருக்கும் QRகுறியீட்டைப் பயன்படுத்திப் பணத்தைச் செலுத்த வேண்டும்.
மேலும் அதிகப்படியான கேஷ்பேக் 100 ரூபாய் மட்டுமே என்றும் மொபிகிவிக் அறிவித்துள்ளது. இந்தச் சலுகை டெல்லி என்சிஆர், மும்பை மற்றும் பெங்களுரில் மட்டுமே.

அதுவும் மொபிகிவிக் பணப் பரிமாற்றம் கொண்ட பெட்ரோல் பங்க் மட்டுமே இது உண்டு. எந்தெந்த பகுதிகளில் எந்தெந்த பங்குகளில் இச்சேவைக் கிடைக்கும் எனத் தெரிந்துகொள்ளக் கீழே உள்ள இணைப்பை கிளிக் செய்யவும்.
இந்தச் சலுகை ஜனவரி 20 மற்றும் 23ஆம் தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை மட்டுமே. மேலும் இதனை ஒருவருக்கு ஒருமுறை தான் பயன்படுத்த முடியும். ஆனால் தினசரி பரிமாற்றங்களில் 10 சதவீத கேஷ்பேக் பெற முடியும். தினசரி ஆஃபரும் ஒருவருக்கு ஒருமுறை தான்.

இவை அனைத்திற்கும் நீங்கள் மொபிகிவிக் செயலியை பயன்படுத்த வேண்டும்.
பெட்ரோல் பங்கு விபரம்: https://promotions.mobikwik.com/fuel/
இக்கட்டுரை வாசகர்கள் நலனுக்காக மட்டுமே, மொபிகிவிக் செயலியை மக்களிடம் திணிப்பதற்கு அல்ல.


Click it and Unblock the Notifications