25 பில்லியன் டாலர் மதிப்பிலான புதிய நிறுவனம்.. அபுதாபி அரசு அதிரடி..!
அபுதாபி அரசு சனிக்கிழமை அந்நாட்டின் மிகப்பெரிய முதலீட்டு நிறுவனங்களை இணைந்துள்ளது.
இந்நாட்டில் தற்போது நிலவி வரும் நிதிநிலை பிரச்சனைகளைக் களையும், கச்சா எண்ணெய் வர்த்தகத்தின் மூலம் இயல்பான வருமானம் மற்றும் லாபத்தை அடைய முபாடாலா வளர்ச்சி நிறுவனம் மற்றும் சர்வதேச பெட்ரோலிய முதலீடு நிறுவனம் ஆகிய இரண்டையும் இணைத்துள்ளது.

இப்புதிய நிறுவனத்திற்கு முபாடாலா வளர்ச்சி நிறுவனத்தின் தற்போதைய தலைவரான Khaldoon al-Mubarak சிஇஓவாக விளங்குவார் என உயர் நிர்வாகக் குழு முடிவு செய்துள்ளது.
2015ஆம் ஆண்டு நிதிநிலையின் படி இணைக்கப்பட்ட இப்புதிய நிறுவனத்தின் மொத்த சொத்து மதிப்பு 125 பில்லியன் டாலர். இந்த இணைப்பு குறித்த அறிவிப்பை 2016ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications