பல ஆண்டுகளாகப் பிப்ரவரி மாதத்தின் கடைசி நாளில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வந்த மத்திய அரசு, நாட்டின் வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு பல ஆலோசனை மற்றும் ஆய்வுகளுக்குப் பின் தாக்கல் செய்யப்படும் நாள்-ஐ பிப்ரவரி 1ஆம் தேதிக்கு மாற்றியது.
இந்நிலையில் பிப்ரவர் 4 மற்றும் மார்த் 8ஆம் தேதிகளில் உத்திர பிரதேசம், உத்தரகண்ட், மணிப்பூர், பஞ்சாப் மற்றும் கோவா ஆகிய மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளதால், நாடாளுமன்றதல் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவது குறித்துத் தேர்தல் ஆணையம் அனுமதி வழங்க வேண்டும்.
மத்திய அரசுக்கு நாடாளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யத் தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கினாலும், நிதியமைச்சகத்திற்குச் சில முக்கிய நிபந்தனைகளை விதித்துள்ளது.

இதன் பிடி தேர்தல் நடக்கும் மாநிலங்கள் சார்ந்த திட்டங்கள் எதுவும் பட்ஜெட் அறிக்கையில் வெளியிடக் கூடாது, இந்த 5 மாநிலங்களில் செய்யச் சாதனை மற்றும் வெற்றி திட்டங்களையும் பட்ஜெட் அறிக்கையில் குறிப்பிடக்கூடாது என நிதியமைச்சகத்திற்குத் தேர்தல் ஆணையம் நிபந்தனைகளை விதித்துள்ளது.
வெற்றி திட்டங்களைக் குறிப்பிடுவதன் மூலமும், புதிய திட்டங்களை அறிவிப்பதன் மூலம் ஆட்சியில் இருக்கும் அரசுகள் மக்களின் ஆதரவைப் பெற முடியும். இதனால் தேர்தலின் வெளிப்படைத் தன்மை மற்றும் நேர்மை பாதிக்கப்படும் எனத் தேர்தல் ஆணையத்தின் செயலாளர் பி.கே.சின்ஹா தெரிவித்துள்ளார்.
எனவே பட்ஜெட் 2017 அறிக்கையில் உத்திர பிரதேசம், உத்தரகண்ட், மணிப்பூர், பஞ்சாப் மற்றும் கோவா ஆகிய மாநிலங்களுக்கான திட்டங்கள் எதுவும் இருக்காது.


Click it and Unblock the Notifications