இந்தியாவின் 4வது மிகப்பெரிய மென்பொருள் ஏற்றுமதி நிறுவனமான எச்சிஎல் டெக்னாலஜிஸ் 2016 டிசம்பர் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில் நிறுவனத்தின் லாப அளவுகள் 7.8 சதவீதம் உயர்ந்து 2,070 கோடி ரூபாய்ப் பெற்றுள்ளதாக அறிவித்துள்ளது.
எச்சிஎல் டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் லாப வளர்ச்சியை ஒப்பிடும்போது டிசிஎஸ்-இன் வளர்ச்சி குறைவுதான்.
லாபம்
2016ஆம் ஆண்டின் அக்டோபர் - டிசம்பர் காலாண்டில் எச்சிஎல் டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் மொத்த லாப அளவுகள் 7.8 சதவீதம் அளவிற்கு உயர்ந்து 2,070
கடந்த வருடம் இதே காலகட்டத்தில் இந்நிறுவனத்தின் மொத்த லாப அளவுகள் 1,920 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
வருவாய்
2015-16ஆம் நிதியாண்டின் டிசம்பர் காலாண்டில் 10,341 கோடி ரூபாயாக இருந்த வருவாய் அளவுகள் 2016இல் 11,814 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
இதன் மூலம் வருவாய் அளவு சுமார் 14.2 சதவீதம் வரை உயர்ந்து காணப்படுகிறது.
டாலர் வருவாய்
எச்சிஎல் டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் டாலர் வருவாய் 11.4 சதவீதம் உயர்ந்து 1.74 பில்லியன் டாலராகவும், டாலர் மதிப்பிலான லாப அளவுகள் 5.2 சதவீதம் உயர்ந்து 306 மில்லியன் டாலராகவும் உயர்ந்துள்ளது.
வளர்ச்சி கணிப்புகள்
2016-17ஆம் நிதியாண்டில் இந்நிறுவனத்தின் வருவாய் 12-14 சதவீதம் வரை வளர்ச்சி அடையும் எனவும் டாலர் வருவாய் அளவுகள் 10-12 சதவீதம் வரை வளர்ச்சி அடையும் எனவும் தனது வளர்ச்சி கணிப்புகளை எச்சிஎல் டெக்னாலஜிஸ் தெரிவித்துள்ளது.
வர்த்தக வளர்ச்சி
அமெரிக்கா, ஐரோப்பிய சந்தையில் 2016ஆம் நிதியாண்டின் டிசம்பர் காலாண்டில் எச்சிஎல் டெக்னாலஜிஸ் சுமார் 13.6 சதவீதம், 17.6 சதவீதம் வரை வளர்ச்சியைச் சந்தித்துள்ளது.
ஊழியர்கள் எண்ணிக்கை
2016 டிசம்பர் மாத முடிவில் எச்சிஎல் நிறுவனத்தின் ஊழியர்கள் எண்ணிக்கை 8,467 அதிகரித்து 1,11,092ஆக உயர்ந்துள்ளது.
ஆனால் ஊழியர்கள் வெளியேற்ற விகிதம் 17.9 சதவீதமாக உள்ளது.
ஈவுத்தொகை
இந்நிலையில் எச்சிஎல் டெக்னாலஜிஸ் நிறுவனம் தனது பங்கு முதலீட்டாளர்களுக்கு ஒரு பங்கிற்கு 6 ரூபாய் ஈவுத்தொகையாக அறிவித்துள்ளது.
பங்குச்சந்தை வர்த்தகம்
10.30 மணியளவில் மும்பை பங்குச்சந்தையில் எச்சிஎல் டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் பங்கு மதிப்பு 1.24 சதவீதம் குறைந்து 846.75 ரூபாய்க்கு வர்த்தகம் செய்யப்படுகிறது.
More From GoodReturns

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

52 வார சரிவில் HDFC வங்கி பங்குகள்.. ஓரேயொரு நபர் செய்த வேலையால்.. ரூ.1 லட்சம் கோடி காலி..!!!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

டிரம்ப் அடித்த அந்தர் பல்டி.. ஈரான் மீதான தடை நீக்கம்.. எல்லாம் தலைகீழாக மாறுதே..!!

டிரம்ப்-ன் அந்த ஒரு வார்த்தை.. ஈரான் அரசு கடும் கோபம்.. வெளியான உச்சக்கட்ட எச்சரிக்கை..!!



Click it and Unblock the Notifications