கள்ள நோட்டுகள் வைப்புச் செய்யப்பட்டது குறித்த தகவல் இல்லை: ரிசர்வ் வங்கி
மத்திய அரசு நாட்டில் கள்ள நோட்டுகள் மற்றும் கருப்புப் பணத்தை ஒழிப்பதற்காகப் பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளைப் பயன்படுத்த தடை விதித்தனர். இதன் பின் மக்கள் தங்களிடம் இருக்கும் பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை வங்கியில் மற்றும் வங்கி கணக்கில் வைப்பு செய்தனர்.

இதில் பெருமளவில் கள்ள நோட்டுகளும் வந்துள்ளது என ரிசர்வ் வங்கி முன்பு அறிவித்தது.
இதுகுறித்த மும்பையைச் சேர்ந்த அனில் கல்கலி தகவல் அறியும் சட்டத்தின் கீழ் நவம்பர் 8ஆம் தேதிக்கு இந்திய வங்கி அமைப்புக்குள் எவ்வளவு கள்ள நோட்டுகளை வைப்பு செய்யப்பட்டுள்ளது என்று கேள்வி கேட்டார்.
இக்கேள்விக்குப் பதில் அளித்த ரிசர்வ் வங்கி, கள்ள நோட்டுகள் வைப்பு குறித்து எவ்விதமான தகவல்களும் தற்போது இல்லை என் ஆர்பிஐ தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications