2014-2015 நிதி ஆண்டிற்கான வருமான வரி தாக்கல் செய்யப்பட்ட தரவில் இருந்து அந்தப் பெயர் அறிவிக்கப்படாத கணக்கின் விவரத்தை இந்தியா ஸ்பெண்டு வெளியிட்டுள்ளது.
இந்தியாவில் உள்ள 11 சதவீத மக்களின் வருமான வரிக்கு நிகராக ஒரே ஒருவர் மட்டும் வருமான வரி செலுத்துகிறார் என்றால் உங்களால் நம்ப முடிகின்றதா..?
2014-2015 நிதி ஆண்டிற்கான வருமான வரி தாக்கல் செய்யப்பட்ட தரவில் இருந்து அந்தப் பெயர் அறிவிக்கப்படாத கணக்கின் விவரத்தை இந்தியா ஸ்பெண்டு வெளியிட்டுள்ளது.
2016-ம் ஆண்டுத் தரவின் படி அந்தப் பெயர் தெரியாத நபரின் வருமான வரி மட்டும் அரசுக்கு 21,570 கோடி என்றும் கூறப்படுகின்றது.
500 கோடி சொத்து
மூன்று தனிநபர்கள் 2014-2015-ம் ஆண்டுத் தங்களது வணிக வருவாயாக 500 கோடிக்கும் அதிகமாகக் கணக்கு காண்பித்து இருக்கின்றனர். அவர்கள் பெயரை பொது மக்களுக்கு அறிவிக்கவில்லை.
இந்தியாவில் வரி செலுத்துனர்கள்
இந்தியாவில் மொத்தம் 36.5 மில்லியன் வரி செலுத்துனர்கள் உள்ளதாகவும், அதில் 16.5 லட்சம் கோடி ரூபாய்க்கு வரி தக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும், 1.91 கோடி ரூபாய் இன்னும் செலுத்த வேண்டி உள்ளதாகவும் வருமான வரித்துறையினர் கூறுகின்றனர்.
மத்திய நேரடி வரி வாரியம் வெளியிட்டுள்ள தரவில் சென்ற ஆண்டு 3.81 சதவீதம் இந்தியர்கள் மட்டுமே வரி செலுத்தி உள்ளதாகக் கூறுகின்றது.
இந்தியா
ஆக்ஸ்ஃபான் இந்தியா வெளியிட்டுள்ள அறிக்கையின் படி இந்தியாவில் உள்ள 1 சதவீத பணக்காரர்களிடம் 58 சதவீத மக்களுக்கு நிகரான சொத்து மதிப்பு உள்ளதாகத் தெரிவிக்கின்றது. மேலும் 70 சதவீத ஏழை மக்களிடம் உள்ள அளவிற்கு 57 பில்லியனர்களிடம் சொத்து உள்ளதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அமெரிக்கா
அமெரிக்காவில் 1 சதவீத பணக்காரர்களிடம் 19 சதவீத மக்களிடம் உள்ள அளவிற்குச் சொத்து மதிப்பு உள்ளது என்றும், 38 சதவீதத்தினர் வருமான வரி செலுத்துவதாகவும் தரவு கூறுகின்றது.
உலக மக்களின் நிலை
ஆக்ஸ்ஃபான் முன்பு வெளியிட்ட அறிக்கையில் 8 தனிநபர்களிடம் உலக மக்கள் தொகையில் 50 சதவீதத்தனரின் சொத்து மதிப்பு உள்ளது எனக் கூறியது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications