நாட்டின் முன்னணி டெலிகாம் நிறுவனங்களான ஏர்டெல் மற்றும் வோடாபோன் நிறுவனம் மேற்கு வங்க மாநிலத்தில் மட்டும் அடுத்த 5 வருடத்தில் சுமார் 6,000 கோடி ரூபாய் முதலீடு செய்யத் திட்டமிட்டுள்ளது.
இந்த முதலீட்டுக்கான சில திட்டங்கள் தற்போது நடைமுறையில் உள்ளது. மேலும் அரசு கட்டிடங்கள் மேல் டெலிகாம் டவரை நிறுவ ஏர்டெல், வோடபோன் ஆகிய நிறுவனங்கள் அனுமதிக்காக இம்மாநில அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
பார்தி மிட்டல்
இப்புதிய முதலீட்டுத் திட்டத்தைக் குறித்துச் சர்வதேச வர்த்தகக் கூட்டம் 2017இல் பேசிய ஏர்டெல் நிறுவனத்தின் தலைவர் பார்தி மிட்டல், "இது நாள் வரையில் மேற்கு வங்க மாநிலத்தில் ஏர்டெல் நிறுவனம் சுமார் 13,000 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளது. இந்நிலையில் அடுத்த 5 வருடங்களில் 3,500 கோடி ரூபாய் முதலீடு செய்யத் திட்டமிட்டு அதற்கான பணிகள் நடந்து வருகிறது" எனக் கூறினார்.
வோடபோன்
வோடபோன் நிறுவனம் தனது வர்த்தகத்தை விரிவாக்கம் செய்யவும், மேம்படுத்தவும் அடுத்த 3 வருடத்தில் 3,000 கோடி ரூபாய் அளவிலான முதலீட்டைச் செய்ய வோடபோன் மற்றும் மேற்கு வங்க மாநில அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.
2 கோடி வாடிக்கையாளர்கள்
கொல்கத்தா மற்றும் மேற்கு வங்க வட்டங்களில் வோடபோன் நிறுவனம் சுமார் 2 கோடி மொபைல் வாடிக்கையாளர்களுக்குச் சேவை அளித்து வருவதாகத் தெரிவித்துள்ளது.
முதலீட்டாளர் மாநாட்டு
மேற்கு வங்க மாநிலம் நடத்திய சர்வதேச முதலீட்டாளர் மாநாட்டின் வாயிலாகப் பொருளாதாரத்தில் தேக்க நிலையிலும் இருக்கும் நிலையிலும் சுமார் ரூ. 2.35 லட்சம் கோடி முதலீட்டை ஈர்த்துள்ளது.
More From GoodReturns

இந்த வாரம் 4 நாட்கள், அடுத்த வாரம் 3 நாட்கள்: பங்குச்சந்தை முதலீட்டாளர்களே முதல்ல இத படிங்க

பங்குச்சந்தை சரிவில் இந்த தப்பு மட்டும் பண்ணாதீங்க - முதலீட்டாளர்களுக்கு விஜய் கேடியா கூறும் டிப்ஸ்

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு கருப்பு வெள்ளி..!! ஒரே நாளில் ரூ.8 லட்சம் கோடி அவுட்..!!

தங்கம், வெள்ளி விலை: வாரத்தின் முதல் நாளிலேயே குட் நியூஸ்..!! தங்கம் வாங்க சிறந்த நாள்..!!

முதலீட்டாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி: 1500 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்த சென்செக்ஸ்!!

ஆசை காட்டி மோசம் செய்யும் தங்கம்..!! ஆறுதல் தந்த வெள்ளி..!! இப்போ வாங்கலாமா? வெயிட் பண்ணலாமா?

கதறி கதறி அழும் வெள்ளி முதலீட்டாளர்கள்.. போட்ட காசு மொத்தமும் போச்சு..!! அடுத்தது என்ன..?

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

தங்கம் விலை: 2 நாட்களில் நடந்த திருப்பம்!! மார்ச் மாத மேஜிக் முடிவுக்கு வந்ததா?

கண்ணாமூச்சி ஆடும் தங்கம்.. ரிவர்ஸ் எடுக்கும் வெள்ளி..! இந்த 2 பேர் எடுக்கிற முடிவுல தான் எல்லாமே இருக்கு!

தங்கம் விலை: 24 மணி நேரத்தில் 4 முறை மாறிய விலை!! ஈரான் போரால் நடக்கும் அக்கப்போர்!!



Click it and Unblock the Notifications