ஏர்டெல் நிறுவனத்தின் சாயம் வெளுத்தது.. ஜியோ அறிமுகத்தால் வந்தது வினை..!

மும்பை: நாட்டின் முன்னணி டெலிகாம் நிறுவனமான பார்தி ஏர்டெல், ரிலையன்ஸ் ஜியோ அறிமுகத்தில் மிகப்பெரிய வர்த்தகச் சரிவை சந்தித்ததைத் தொடர்ந்து மறுத்து வந்தது மட்டுமல்லாமல் வாடிக்கையாளர் எண்ணிக்கையில் எவ்விதமான மாற்றமும் இல்லை என முதலீட்டாளர்கள் நம்ப வைத்தது.

ஆனால் 2016 டிசம்பர் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில் மட்டும் பார்தி ஏர்டெல் நிறுவனத்தின் லாபம் 54.6 சதவீதம் வரை சரிந்துள்ளது.

லாபம்

லாபம்

2016ஆம் ஆண்டின் அக்டோப்ர்-டிசம்பர் காலாண்டில் ஏர்டெல் நிறுவனத்தின் லாப வெறும் 504 கோடி ரூபாய் பெற்றுள்ளது. கடந்த நிதியாண்டின் இதே காலகட்டத்தை ஒப்பிடும்போது இதன் அளவு 1,108.1 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

இதனால் பார்தி ஏர்டெல் நிறுவனத்தின் லாப அளவுகள் சுமார் 54.6 சதவீதம் வரை சரிந்தது.

 

வருவாய்

வருவாய்

இக்காலகட்டத்தில் ஏர்டெல் நிறுவனத்தின் வருவாய் அளவுகளும் 3 சதவீதம் சரிந்து 24,066 கோடி ரூபாயில் இருந்து 23,336 கோடி ரூபாயாகக் குறைந்தது.

ஜியோ அறிமுகம்

ஜியோ அறிமுகம்

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவரான முகேஷ் அம்பானி 1.75 லட்சம் கோடி ரூபாய் முதலீட்டில் பல மாதங்களாகச் செய்யப்பட்ட படிப்படியான ஆய்வு மற்றும் அறிமுகச் சோதனைக்குப் பின்பு, செப்டம்பர் மாத்தில் முழுமையான சேவையை மக்களுக்கு அறிமுகம் செய்தார்.

ஜியோ சேவை அறிமுகத்தில் 90 நாட்கள் கொண்ட வெல்கம் ஆஃபர் என டேட்டா, வாய்ஸ் கால் என அனைத்தையும் இலவசமாக அறிவித்தார் முகேஷ் அம்பானி. இதனால் இந்திய டெலிகாம் சந்தையே தலைகீழாக மாறியது.

இதன் வெளிப்பாடே ஏர்டெல் நிறுவனத்தின் லாபத்தில் 54.6 சதவீத சரிவு.

 

கோபால் விட்டல்

கோபால் விட்டல்

காலாண்டு முடிவுகள் வெளியீட்டு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட கோபால் விட்டல்," இந்திய சந்தையில் புதிதாகக் களமிறங்கியுள்ள டெலிகாம் நிறுவனத்தின் சலுகை திட்டத்தின் மூலம் டிசம்பர் காலாண்டில் ஏர்டெல் நிறுவனத்தின் வருவாய் மற்றும் லாப அளவுகளில் மிகப்பெரிய அளவிலான மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது." என்று கூறினார்.

கோபால் விட்டல் பார்தி ஏர்டெல் நிறுவனத்தின் இந்தியா மற்றும் தென் ஆசிய வர்த்தகச் சந்தையில் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி ஆவார்.

 

என்ன காரணம்

என்ன காரணம்

தற்போதைய நிலையில் ஏர்டெல் நிறுவனத்தில் டெர்மினேஷன் காஸ்ட் அளவுகள் 14 பைசாவாக உள்ளது. இது இயல்பான வர்த்தக நிலையை விட மிகவும் குறைவு. இதன் காரணமாகவே பார்தி ஏர்டெல் நிறுவனத்தின் வருவாய் அளவுகள் மிகப்பெரிய மாற்றங்களைச் சந்தித்துள்ளது எனவும் கோபால் விட்டல் தெரிவித்தார்.

மார்ச் 31

மார்ச் 31

ரிலையன்ஸ் ஜியோ அறிவித்துள்ள படி தற்போது செயல்பாட்டில் இருக்கும் ஹேப்பி நியூ இயர் ஆஃபர் வருகிற மார்ச் 31ஆம் தேதி வரை நீடிக்கிறது.

நைஜீரியா வர்த்தகம்

நைஜீரியா வர்த்தகம்

இந்நாட்டில் நாணய மதிப்பு அதிகளவில் குறைந்துள்ளதால், இப்பகுதியைச் சார்ந்த வர்த்தகத்தில் வருவாய் அளவுகளில் எவ்விதமான மாற்றமுமில்லை என ஏர்டெல் தெரிவித்துள்ளது.

பிற வர்த்தகம்

பிற வர்த்தகம்

ஏர்டெல் நிறுவனத்தில் டெலிகாம் சேவை ஜியோவால் பாதிக்கப்பட்டாலும், டிஜிட்டல் டிவி 17.7 சதவீதமும், ஏர்டெல் பிஸ்னஸ் 12.5 சதவீதமும், ஹோம்ஸ் 10.8 சதவீதமும் உயர்ந்துள்ளது.

மொபைல் டேட்டா

மொபைல் டேட்டா

மேலும் ஏர்டெல் நிறுவனத்தின் மொபைல் டேட்டாவின் வருவாய் 3 சதவீதம் சரிந்து 3,087 கோடி ரூபாயாக உள்ளது.

ஜியோவின் அடுத்த ஆஃபர் ரெடி..!

ஜியோவின் அடுத்த ஆஃபர் ரெடி..!

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+