நமக்குக் கிடைத்துள்ள ஆதாரங்களின் படி வாரத்திற்கு 24,000 ரூபாய் எடுக்கலாம் என்று இருக்கும் கட்டுப்பாடு தளர்த்தப்பட்டால் என்று அதனால் வங்கிகளுக்கு மேலும் சிரமத்தை அளிக்கும் என்றும் கூறப்படுகின்றது.
பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவித்த பிறகு வாரத்திற்கு 24,000 ரூபாய் வரை வங்கி மற்றும் ஏடிஎம் மூலம் பணத்தை எடுக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது.
இப்போது அந்த வரம்பை இன்னும் உயர்த்த முடிவு செய்துள்ளதாகவும் ஆனால் மூன்று வாரத்திற்குப் பிறகு தான் உயர்த்தப்படும் என்று ஆர்பிஐ முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகின்றது.
மத்திய வங்கி
தினசரி பணம் எடுக்கும் வரம்பை ஏடிஎம் மற்றும் வங்கிகளில் ஏற்படும் பணப் பரிவர்த்தனைகளை ஆராய்ந்து மேலும் உயர்த்தும் என்று மத்திய வங்கி அலுவலக வட்டாரம் தெரிவிக்கின்றன.
மூன்று முறை
500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்ததில் இருந்து மூன்று முறை பணம் எடுக்கும் வரம்பை ஆர்பிஐ மாற்றி அமைத்தது. இப்போது ஏடிஎம் மூலம் தினமும் 10,000 ரூபாய் வரை எடுக்கலாம்.
தட்டுப்பாடு குறைந்துள்ளது
பணத் தட்டுப்பாடு இப்போது குறைந்துள்ளது என்றும் இன்னும் ஒரு மாதத்தில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் என்று ஹிந்துஸ்தான் டைம்ஸ் இதழுக்கு மூத்த அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
வங்கிகளுக்குத் தலைவலி
நமக்குக் கிடைத்துள்ள ஆதாரங்களின் படி வாரத்திற்கு 24,000 ரூபாய் எடுக்கலாம் என்று இருக்கும் கட்டுப்பாடு தளர்த்தப்பட்டால் என்று அதனால் வங்கிகளுக்கு மேலும் சிரமத்தை அளிக்கும் என்றும் கூறப்படுகின்றது.
பிப்ரவரி இறுதி
மத்திய வங்கி தட்டுப்பாடு இல்லாமல் வங்கிகளுக்குப் பணத்தை அளிக்கும் போது பணம் எடுப்பதற்கான வரம்பு உயர்த்தப்படும் என்றும் அதற்குப் பிப்ரவரி மாதம் இறுதி வரை நேரம் எடுத்துக்கொள்ளப்படும் என்று ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவின் மூத்த பொருளாதார ஆலோசகர் சவுமியா காந்தி கோஷ் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications