மும்பை: இந்திய தனியார் வங்கித்துறையில் அதிகப்படியான வர்த்தகம் செய்வதில் ஐசிஐசிஐ வங்கி முதல் இடத்தைப் பிடித்தாலும், லாபத்திலும், வர்த்தகத்திலும் நிலையான வளர்ச்சிக்குப் பெயர்போனது எச்டிஎப்சி வங்கி.
இந்நிலையில் டிசம்பர் மாதத்தில் மத்திய அரசின் நாணய மதிப்பிழப்பு நடவடிக்கையின் மூலம் இந்திய வங்கித்துறையின் வர்த்தகம் தடுமாறினாலும், எச்டிஎப்சி வங்கி நிலையான லாப உயர்வைச் சந்தித்துள்ளது.
லாபம்
2016ஆம் ஆண்டின் அக்டோபர்-டிசம்பர் வரையிலான காலகட்டத்தில் எச்டிஎப்சி வங்கியின் லாப அளவுகள் சுமார் 15.1 சதவீதம் உயர்ந்து 3,865.3 கோடி ரூபாயாக உள்ளது.
வருமானம்
இந்நிலையில் இவ்வங்கியின் மொத்த வருமானத்தின் அளவு 17.6 சதவீதம் உயர்ந்து 8,309.1 கோடி ரூபாய் அளவில் உயர்ந்துள்ளது.
சொத்து மதிப்பு
இதனுடன் வங்கியின் சொத்து மதிப்பு 18.6 சதவீதமும், வட்டி வருமானத்தின் அளவு 4.1 சதவீதம் வரையிலும் உயர்ந்துள்ளது. மேலும் எச்டிஎப்சி வங்கியின் இதர வருமானத்தின் அளவும் 9.4 சதவீதம் உயர்ந்து 3,142.7 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
பணமதிப்பிழப்பு
மத்திய அரசின் 500 மற்றும் 1000 ரூபாய் மீதான தடைக்குப் பின், நடப்பு மற்றும் சேமிப்புக் கணக்குகளில் வைப்பு நிதியின் அளவு சுமார் 37 சதவீதம் அதிகரித்துள்ளது.
எச்டிஎப்சி வங்கியின் மொத்த வைப்பு நிதியில் 45 சதவீதம் இவை என்பது குறிப்பிடத்தக்கது.
கடன் வர்த்தகம்
உள்நாட்டுச் சந்தையில் இவ்வங்கியின் கடன் வர்த்தகம் 17.5 சதவீதம் உயர்ந்துள்ளதாக எச்டிஎப்சி வங்கி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
ஐசிஐசிஐ வங்கி
இந்நிலையில் தனியார் வங்கித்துறையில் முதல் இடத்தில் இருக்கும் ஐசிஐசிஐ வங்கியின் காலாண்டு முடிவுகள் வருகிற ஜனவரி 31ஆம் தேதி வெளியிட இவ்விங்கி திட்டமிட்டுள்ளது.


Click it and Unblock the Notifications