நாட்டின் முன்னணி மென்பொருள் நிறுவனங்களில் ஒன்றான விப்ரோ டிசம்பர் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில் மட்டும் 2,109.60 கோடி ரூபாய் லாபத்தைப் பெற்றுள்ளது.
இது கடந்த காலாண்டை ஒப்பிடுகையில் இதன் அளவு 2,070.40 கோடி ரூபாயாக இருந்தது, இதன் மூலம் விப்ரோ நிறுவனத்தின் லாப அளவுகள் சுமார் 1.80 சதவீதம் வரை அதிகரித்துள்ளது.

மேலும் இக்காலகட்டத்தில் விப்ரோ நிறுவனத்தின் வருவாய் 0.95 சதவீதம் குறைந்து 13.764.50 கோடி ரூபாயாக உள்ளது. செப்டம்பர் 2016ஆம் காலாண்டில் இதன் அளவு 13,869.80 கோட ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிறுவனத்தின் 2 ரூபாய் முகமதிப்புடைய பங்கு முதலீட்டாளர்களுக்கு ஒரு பங்கிற்கு 2 ரூபாய் ஈவுத்தொகை அளிப்பதாக விப்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது.
அதுமட்டும் அல்லாமல் விப்ரோ நிறுவனம் நடப்புக் காலாண்டில் இன்போசர்வர் என்ற பிரேசில் நாட்டு நிறுவனத்தை 8.7 மில்லியன் டாலருக்குக் கைப்பற்ற உள்ளதாகத் தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications