இந்த நிறுவனங்கள் எப்படி எல்லாம் தங்களது வருமானத்தில் இழப்பைச் சந்திக்கும் என்று இங்குப் பார்ப்போம்.
தமிழ்நாடு வணிகர் சங்கம் கோகோ கோலா மற்றும் பெப்ஸி குளிர்பானங்கள் விற்பனையை மார்ச் 1-ம் தேதி முதல் விற்பதை நிறுத்தப் போவதாக அறிவித்துள்ளது. இதனால் அமெரிக்க நிறுவனங்கள் இரண்டுக்கும் 1,400 கோடி ரூபாய் வரை இழப்பு நேரிட வாய்ப்புள்ளது.
மேலும் இந்த நிறுவனங்கள் எப்படி எல்லாம் தங்களது வருமானத்தில் இழப்பைச் சந்திக்கும் என்று இங்குப் பார்ப்போம்.
வணிகர்கள் பெப்ஸி மற்றும் கோகோ கோலா நிறுவனங்களின் நொறுக்குத் தீனிகள், ஓட்ஸ் போன்றவற்றை விற்பதையும் தடை செய்தால் பெறும் அளவில் பாதிப்பு ஏற்படும் என்று நமக்குக் கிடைத்த ஆதாரங்கள் தெரிவிக்கின்றன. தமிழ் நாட்டில் மிகப்பெரிய வணிகர் சங்கமான இதில் 15 லட்சம் உறுப்பினர்கள் உள்ளனர். அது மட்டும் இல்லாமல் 6000 சிறு சங்கங்களும் தமிழ்நாட்டில் உள்ளன. மார்ச் 1-ம் தேதி முதல் அனைத்து வணிகர் சங்கங்களும் விற்பனையை நிறுத்தும் போது பெப்ஸி, கோகோ கோலா நிறுவனங்கள் பெரிதளவில் பாதிக்கப்படும். உள்ளூர் குளிர்பானங்கள் நிறுவனங்களுக்கு வணிகர் சங்கம் முன்னுரிமை அளிக்கும் என்று வணிகர் சங்கம் முடிவு செய்துள்ளதால் தமிழக நிறுவனங்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளன. பீட்டா, கோகோ கோலா மற்றும் பெப்ஸி நிறுவனங்களால் தான் விவசாயிகள் பெரிதளவில் பயப்படுகின்றார்கள் என்றும், ஜல்லிக்கட்டுத் தடை செய்யப்பட்டது என்றும் அவற்றுக்கு எதிராகவே மார்ச் 1-ம் தேதி முதல் வெளிநாட்டுக் குளிர்பானங்கள் விற்கப்போவதில்லை என்று வணிகர் சங்க வட்டாரங்கள் கூறுகின்றன. அது மட்டும் இல்லாமல் வெளிநாட்டுக் குளிர்பானங்கள் நிறுவனங்கள் இரட்டை விலை முறையில் தங்களுக்குப் பொருட்கள் அளிப்பதாகவும், அதாவது பெரிய கடைகளுக்குக் குறைந்த விலையிலும், சிறு கடைகளுக்குக் அதிக விலையிலும் பொருட்களை அளிப்பதாகவும் கூறுகின்றனர். தமிழகக் குளிர்பான சந்தையில் 60 சதவீத சந்தையைப் பெப்ஸி நிறுவனம் வைத்துள்ளது. இந்தியாவில் ஆறாவது பெரிய மக்கள் தொகை உள்ள தமிழகத்தில் பெப்ஸி நிறுவனத்திற்கு 3 தொழிற்சாலைகளும், கோகோ கோலா நிறுவனத்திற்கு இரண்டு தொழிற்சாலைகளும் உள்ளன. தமிழக நடிகர்கள் தனுஷ், ஸ்ருதிஹாசன் உட்பட்டோர் விளம்பர தூதர்களாக உள்ளனர். இந்திய குளிர்பான சங்கத்தின் பொதுச் செயலாளர் அரவிந் வர்மா இது தவறான முடிவு என்றும் இப்படிச் செய்யக்கூடாது கோகோ கோலா மற்றும் பெப்ஸி நிறுவனங்களுக்குச் சாதகமாகப் பதில் அளித்துள்ளார். இந்த நடவடிக்கையால் இந்தியாவின் நீண்ட காலப் பொருளாதாரம் மற்றும் வளர்ச்சிக்குத் தீங்கு விளைவிக்கும் என்றும் அவர் கூறினார். ஏதேனும் பொருட்களை விற்பது மற்றும் தடை செய்வது அரசின் கடைமை என்றாலும், தமிழக வணிகர்கள் சங்கம் அவர்களுடைய தனிப்பட்ட முடிவு. அன்மையில் இது போன்ற குளிர்பான நிறுவனங்களின் மீது அதிகப்படியான சர்க்கரை பயன்படுத்தப்படுகின்றது என்றும் அதனால் மனித உடலில் கொழுப்பு அதிகரிக்கின்றது என்றும் கூறப்படுவது குறிப்பிடத்தக்கது. இதனால் சில மாநிலங்களில் கொழுப்பு வரி விதிக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது. இதேப் போன்று வரும் பட்ஜெட் 2017-ல் மத்திய அரசு கொழுப்பு வரி விதிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது. இதேப் போன்று பதஞ்சலி நிறுவனமும் கோக், பெப்ஸி குளிர்பானங்களில் அதிகச் சர்க்கரை சேர்க்கப்படுகின்றது என்றும் அதனால் இந்த வெளிநாட்டுக் குளிர்பானங்கள் மீது கொழுப்பு வரி விதிக்க வேண்டும் என்று மத்திய அரசிடம் கோரிக்கை வைத்ததும் குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் கார்பன் ஏற்றப்பட்ட குளிர்பான சந்தை 14,000 கோடி ரூபாயாக உள்ளது என்றும், இதில் பெறும் பங்கை பெப்ஸி மற்றும் கோகோ கோலா நிறுவனங்கள் வைத்துள்ளன.
நொறுக்குத் தீனிகள்
தமிழக வணிகர் சங்கங்கள்
உள்ளூர் குளிர்பானங்கள்
காரணம்
பெப்ஸிகோ
இந்திய குளிர்பான சங்கம்
அரசு முடிவு எடுக்க வேண்டும்
பதஞ்சலி
இந்திய குளிர்பான சந்தை
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?



Click it and Unblock the Notifications