உலக நாடுகள் தங்களின் ஜிபிடி அளவில் சராசரியாக 6 சதவீதத்தை மக்களின் சுகாதார மேம்பாட்டிற்காகச் செலவு செய்துகொண்டிருக்கும் நிலையில், இந்தியா வெறும் 1.4 சதவீதம் தொகையை மட்டுமே செலவு செய்து வருகிறது என உலக வங்கி அறிவித்துள்ளது.
இந்த 1.4 சதவீத தொகை கூட முழுமையாக மக்கள் நலனுக்காகச் செல்கிறதா என்றால் பார்த்தால் அதுவும் சந்தேகமே.
இந்தியா
இன்றைய சர்வதேச பொருளாதாரத்தில் இந்தியாவிற்குத் தனி இடம் கிடைத்துள்ளதன் முக்கியக் காரணம் இந்தியர்கள் மக்களிடத்தில் இருக்கும் திறன், அறிவு சார்ந்த தொழில்நுட்பமும் தான். மேலும் இந்திய தற்போது செய்தும் வரும் 90 சதவீத தொழிற்துறை மற்றும் தொழில்நுட்ப பணிகள் மக்களை நம்பி மட்டுமே செய்து வருகிறது.
இத்தகைய சூழ்நிலையில் மக்கள் சுகாதாரத்தைக் காக்க வேண்டியது மத்திய அரசின் கடமை.
உலக வங்கி
சர்வதேச நாடுகளில் மக்கள் சுகாதாரச் செலவுகள் குறித்த ஒரு ஆய்வை உலக வங்கி செய்துள்ளது.
இதில் உலக நாடுகள் மக்களின் சுகாதாரத்தை மேம்படுத்த தங்களது மொத்த உள்நாட்டு உற்பத்தியான ஜிடிபி அளவுகளில் 6 சதவீத்தை செலவு செய்கிறது. ஆனால் இந்தியாவோ 2014ஆம் ஆண்டில் வெறும் 1.4 சதவீதம் மட்டுமே செலவு செய்துள்ளது.
2015-16ஆம் ஆண்டில்
மத்திய நிதியமைச்சகம் செய்த 2015-16ஆம் ஆண்டுக்கான பொருளாதார ஆய்வில் மக்கள் சுகாதாரத்திற்கு மத்திய அரசு 2014ஆம் ஆண்டை விடக் குறைவாக அதாவது வெறும் 1.3 சதவீதம் மட்டுமே செலவு செய்துள்ளது.
பிற நாடுகள்
இந்தியாவை விடப் பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரேசில் நாடு கூட மக்கள் சுகாதாரத்தை மேம்படுத்த 3.8 சதவீதம் செய்கிறது. இந்தியாவை விடப் பொருளாதாரத்திலும் மக்கல் தொகையிலும் பரப்பளவிலும் பெரிய நாடான சீனா கூட 3.1 சதவீதம் செலவு செய்துள்ளது.
இதைத் தொடர்ந்து ரஷ்யா 3.7 சதவீதம் செலவு செய்து தனது நாட்டு மக்களின் சுகாதாரத்தை மேம்படுத்தி வருகிறது.
இந்தோனேசியா
இப்பட்டியலில் இந்தியாவிற்குக் கீழ் இந்தோனேசியா (1.1%) மற்றும் பங்களாதேஷ் (0.8%) ஆகிய நாடுகள் இடம்பெற்றுள்ளது.
5.2 சதவீதம் தேவை
தற்போதைய நிலையில் இந்திய மக்களின் சுகாதாரத்தை மேம்படுத்த 2015ஆம் ஆண்டின் ஜிடிபி அளவில் 5.2 சதவீதம் வரை செலவு செய்ய வேண்டும் என ஆக்ஸ்போர்டு எக்னாமிக்ஸ் தெரிவித்துள்ளது.
கொடுமை
அவை அனைத்திற்கும் ஆதாரமாக உலகச் சுகாதார அமைப்பு உலகிலேயே தொற்று நோய்களுக்கு அதிகம் பாதிக்கப்படுவது இந்தியா தான் எனத் தெரிவித்துள்ளது. இந்த ஆய்வு 2012ஆம் ஆண்டுச் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
புகைப்படம்: லைவ்மின்ட்
பட்ஜெட் 2017
இந்தியாவும், இந்திய மக்களும் தற்போது மிகவும் மோசமான சுகாதார நிலையில் உள்ளனர் என்று உறுதியான இத்தகைய தருணத்திலாவது மத்திய அரசு பிப்ரவரி 1 ஆம் தேதி வெளியிட உள்ள பட்ஜெட் சுகாதார மேம்பாட்டுக்கான செலவுகளை அதிகரிக்குமா..?
More From GoodReturns

ஜியோ ஹாட் ஸ்டாரின் தலைமை அதிகாரியை தேடி வந்து பதவி கொடுத்த ஓபன் ஏஐ நிறுவனம்!!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?



Click it and Unblock the Notifications