ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் இந்தியாவில் மட்டும் உலகளவில் தற்போது மிகப்பெரிய முக்கியத்துவத்தை அடைந்துள்ள நிலையில் எந்தக் கல்லூரிகளில் இருந்து அதிகளவிலான பில்லியன் டாலர் மதிப்புள்ள அதாவது யூனிகான் ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் உருவாக்கப்படுகிறது எனப் பிரிட்டன் நாட்டின் கணக்கியல் மற்றும் வேலைவாய்ப்பு நிறுவனத்தின் ஆய்வு கூறுகிறது.

உலக நாடுகளில் எந்தக் கல்லூரி மாணவர்கள் அதிகளவில் யூனிகான் ஸ்டார்ட்அப் நிறுவனங்களை உருவாக்குகின்றனர் என்று செய்யப்பட்ட ஆய்வில், இந்திய ஐஐடி கல்லூரிகளுக்கு 4வது இடம் கிடைத்துள்ளது.
சர்வதேச பட்டியலில் இந்திய ஐஐடி கல்லூரிகளுக்கு 4வது இடம் கிடைத்துள்ளது இக்கல்லூரிகளுக்குப் பெருமையான விஷயம்.
இப்பட்டியலில் 51 யூனிகான் ஸ்டார்அப் நிறுவன தலைவர்களுடன் ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகம் முதல் இடத்தைப் பிடித்துள்ளது. இதைத் தொடர்ந்து 37 யூனிகான் தலைவர்களுடன் ஹார்வார்டு பல்கலைக்கழகம், 18 யூனிகான் தலைவர்களுடன் கலிப்போர்னியா பல்கலைக்கழகம் 2 மற்றும் 3வது இடத்தைப் பிடித்துள்ள நிலையில், 4வது இடத்தைப் பெருமையுடன் 12 யூனிகான் நிறுவன தலைவர்களுடன் ஐஐடி கல்லூரிகள் பெறுகிறது.

12 யூனிகான் நிறுவனங்களில் 10 நிறுவனங்கள் இந்தியாவில் உள்ளது.
அவை பிளிப்கார்ட், ஸ்னாப்டீல், ஷாப்கூளுஸ், ஓலா, சோமேட்டோ, குவிக்கர், பேடிஎம், இன்மொபி, ஹைக் மற்றும் முசிக்மா ஆகியவை இதில் அடங்கும்.


Click it and Unblock the Notifications