இந்தியாவில் கார் தயாரிப்பு மற்றும் விற்பனையில் முன்னணிலையில் இருக்கும் மாருதி சுசூகி நிறுவனம் தனது கார் தயாரிப்புகளின் விலையை வெள்ளிக்கிழமை முதல் 1,500 முதல் 8,014 ரூபாய் வரை உயர்த்தியுள்ளதாகத் தெரிவித்துள்ளது.
இந்த விலை உயர்வில் மாருதி சுசூகி சமீபத்தில் வெளியிட்ட Ignis காருக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிறுவனத்தில் உற்பத்தி செலவுகள், நிர்வாகச் செலவுகள் மற்றும் போக்குவரத்துச் செலவுகள் அதிகரித்துள்ள காரணத்தால் கார்களின் விலையை உயர்த்தும் கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளதாக மாருதி சுசூகி தெரிவித்துள்ளது. மேலும் 2016ஆம் நிதியாண்டில் மட்டும் 2வது முறையாக இந்நிறுவனம் விலையை உயர்த்தியுள்ளது.
மாருதி சுசூகி நிறுவனத்தின் ஆல்டோ மற்றும் வேகன்ஆர் மாடல்களுக்கு 1,500 ரூபாயும், புதிய அறிகமுமாகப் பெலேனோ கார்க்கு 8,014 ரூபாய் வரை உயர்த்தியுள்ளது.


Click it and Unblock the Notifications