பேமெண்ட்ஸ் வங்கிக்கான உரிமத்தை பெற்றதைத் தொடர்ந்து விரைவில் வங்கி சேவை துவங்கப்படும் என்று தபால் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
வர்த்தக ரீதியாகப் பேமெண்ட்ஸ் வங்கியைத் துவக்குவதற்கான உரிமத்தை ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியாவிடம் இருந்து இந்திய தபால் நிறுவனம் பெற்றது.
பேமெண்ட்ஸ் வங்கிக்கான உரிமத்தை பெற்றதைத் தொடர்ந்து விரைவில் வங்கி சேவை துவங்கப்படும் என்று தபால் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பார்தி ஏர்டெல், பேடிஎம் நிறுவனங்களைத் தொடர்ந்து மூன்றாவதாகப் பேமெண்ட்ஸ் வங்கி சேவையைத் துவக்குவதற்கான உரிமத்தை இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி பெற்றுள்ளது.
பேமெண்ட்ஸ் வங்கி
பேமெண்ட்ஸ் வங்கிக் கணக்குகளில் தனிநபர்கள் அல்லது சிறு நிறுவனங்கள் அதிகபட்சம் 1 லட்சம் ரூபாய் வரை வங்கி கணக்கில் பணத்தை வைக்க இயலும்.
இந்தப் புது வங்கி சேவையின் மூலம் மொபைல் நிறுவனங்கள், பல்பொருள் அங்காடி போன்ற நிறுவனங்களை வங்கி சேவை அளிக்க முடியும். ஆனால் இந்த வங்கி சேவையின் மூலம் கடன் ஏதும் பெற முடியாது. வங்கி கணக்கில் பணத்தை வைத்தல், இணையதள வங்கி போன்ற சேவைகளின் மூலம் பணத்தை ஒரு வங்கி கணக்கில் இருந்து பிற வங்கி கணக்குகளுக்குப் பணத்தை அனுப்புவது பெறுவது போன்றவற்றைச் செய்யலாம்.
11 நிறுவனங்கள்
2015-ம் ஆண்டுப் பேமெண்ட்ஸ் வங்கி சேவைக்காக 11 நிறுவனங்களுக்கு ஆர்பிஐ ஒப்புதல் வழங்கியது. அதில் இந்தியா போஸ்ட் நிறுவனனும் ஒன்று ஆகும்.
பின்வாங்கிய நிறுவனங்கள்
எனினும் டெக் மகேந்திரா, சன் பார்மா, ஐடிஎப்சி வங்கி, டெலினார் நிதி சேவைகள் மற்றும் சோழமண்டலம் இன்வெட்ஸ்மெண்ட் மற்றும் ஃபினான்ஸ் ஆகிய நிறுவனங்கள் பேமெண்ட்ஸ் வங்கி துவங்குவதில் இருந்து பின்வாங்கி உள்ளன.
ஏர்டெல்
8 நிறுவனங்களில் முதலாவதாக 3,000 கோடி ரூபாய் முதலீட்டில் பேமெண்ட்ஸ் வங்கி சேவையைத் துவங்கி உள்ள ஏர்டெல் நிறுவனம் கணக்கில் வைக்கும் தொகைக்கு 7.25 சதவீதம் வரை வட்டி விகதம் அளிப்பதாக அறிவித்து இந்தியா முழுவதும் தனது சேவையைத் துவங்கி உள்ளது.
பேடிஎம்
பேடிஎம் நிறுவனம் சீனாவின் இ-காமர்ஸ் நிறுவனத்துடன் இணைந்து 400 கோடி ரூபாய் பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கி சேவைக்காக முதலீடு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி
இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கியின் தலைமை செயல் அதிகாரியாக ஏ பி சிங் நியமிக்கப்பட்டுள்ளார். ஆதார் திட்டத்தை நிறுவுவதில் குழு உறுப்பினராகவும், பங்கு விற்பனைத் துறையில் இணை இயக்குனர்காவும் இவர் இருந்தது குறிப்பிடத்தக்கது.
பிற நிறுவனங்கள்
ஆதித்யா பில்ரா நூவோ, ஃபினோ பேடெக், நேஷனல் செக்யூரிட்டிஸ் டெபாசிட்டரி, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட், வோடபோன் எம்-பேசா நிறுவனங்களும் விரைவில் பேமெண்ட்ஸ் வங்கி சேவை அளிக்கும் பணியில் இறங்கி உள்ளத் குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications