விளம்பரங்கள் மூலம் வாடிக்கையாளர்களைத் தவறாக வழி நடத்துவதாகவும், எனவே ஏர்டெல் மீது அதிகபட்ச அபராதத்தை விதிக்க வேண்டும் என்று ஜியோ டிராயிடம் புகார் அளித்துள்ளது.
ரிலையன்ஸ் ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்கள் இடையேயான போர் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே தான் செல்கின்றது. ஜியோவின் இலவச ஆஃபர்கள் குறித்து ஏர்டெல் ஏற்கனவே டிராயிடம் புகார் அளித்துள்ள நிலையில் இப்போது ரிலையன்ஸ் ஜியோ ஏர்டெல் மீது புகார் அளித்துள்ளது.
விளம்பரங்கள் மூலம் வாடிக்கையாளர்களைத் தவறாக வழி நடத்துவதாகவும், எனவே ஏர்டெல் மீது அதிகபட்ச அபராதத்தை விதிக்க வேண்டும் என்று ஜியோ டிராயிடம் புகார் அளித்துள்ளது.
ஜியோவின் புகார்
ஜனவரி 19-ம் தேதி டிராயிடம் ஜியோ அளித்த புகாரில் ஏர்டெல் விளம்பரத்தின் வாயிலாக இலவச தரவு மற்றும் அன்லிமிடட் அழைப்பு என்று ஏர்டெல் செய்வது தொலைத்தொடர்பு சட்டங்களை மீறுவதும் என்றும் கூறியுள்ளது.
தவறான விளம்பரம்
மேலும் ஏர்டெல் நிறுவனத்தின் இலவச விளம்பரங்களில் அன்லிமிடெட் அழைப்பு மற்றும் தரவு என்று உள்ளது ஆனால் குறிப்பிட்ட அளவு மட்டுமே என்ற வரம்பு உள்ளது, அதனை ஏர்டெல் நிறுவனம் மறைத்து விளம்பரம் செய்வதாகவும் ஜியோ புகார் அளித்துள்ளது.
உதாரணம்
ஏர்டெல் நிறுவனத்தின் 345 ரூபாய் ரீசார்ஜ் போக்குகளில் ஒரு நாளைக்கு 300 நிமிடம் அல்லது 1,200 நிமிடங்கள் வரை மட்டுமே இலவசமாகப் பேச இயலும். அதற்கு மேற்பட்டுப் பேச வேண்டும் என்றால் 30 பைசா கட்டணமாகச் செலுத்த வேண்டும் என்று வரம்பு உள்ள நிலையில் எப்படி வரம்பற்ற அழைப்பு மற்றும் தரவு என்று விளம்பரம் செய்யலாம் என்று ஜியோ கூறுகின்றது.
ஜியோவின் கூற்று
மேலே கூறியபடி இலவச அழைப்புகள் மற்றும் தரவை ஏர்டெல் நிறுவனம் வழங்காத நிலையில் விளம்பரம் மூலம் வாடிக்கையாளர்களைத் தவறாக ஏர்டெல் நிறுவனம் வழி நடுத்துகின்றது என்றும் தொலைத்தொடர்பு நிறுவன சட்டங்களுக்கு எதிரானது என்றும் ஜியோ கூறுகின்றது.
9000 ரூபாய்க்கு இலவசம் எப்படி
9000 ரூபாய்க்கு இலவச ஆஃபர்களை ஒருவருடத்திற்கு ஜியோ எப்படி வாடிக்கையாளர்களுக்கு வழங்கலாம் என்று கேட்கும்போது அதை மறுத்த ஜியோ முழுவதும் இலவசம் அல்ல, 345 ரூபாய்க் கட்டணமாகச் செலுத்த வேண்டி வரும் என்றும் தெரிவித்துள்ளது. எனவே ஜூலை மாதம் இலவசமாக அழைப்பு மற்றும் தரவை பெற 345 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டி வரும்.
ஜியோவின் வாதம்
ஏர்டெல் நிறுவனத்தில் 450 ரூபாய்க் கட்டணமாகச் செலுத்துவதன் மூலம் 28 நாட்களுக்கு 3 ஜிபி தரவு மட்டுமே பெற இயலும். இதுவே ஒரு வருடத்திற்குக் கணக்கிடப்பட்டால் 5,400 ரூபாய் வரை கட்டணமாகச் செலுத்த வேண்டும் என்று ஜியோ கூறுகின்றது.
More From GoodReturns

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!



Click it and Unblock the Notifications