பிப்ரவரி 1 முதல் ஏடிஎம் கட்டுப்பாடுகள் நீக்கம்.. மத்திய அரசு அறிவிப்பு..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மத்திய அரசு பணமதிப்பிழப்பு நடவடிக்கை அமல்படுத்தப்பட்ட நாள் முதல் வங்கி ஏடிஎம்களில் பண எடுக்கும் அளவீடுகளில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது.

இந்நிலையில் இந்தக் கட்டுப்பாடுகள் படிப்படியாகக் குறைந்து வந்த நிலையில் நடப்பு கணக்கின் மீது தற்போது அனைத்துக் கட்டுப்பாடுகளையும் பிப்ரவரி 1 முதல் முழுமையாக நீக்க உள்ளதாக ரிசர்வ் வங்கி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

நடப்பு கணக்குகள்

நடப்பு கணக்குகள்

இன்று ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையின் நடப்பு கணக்கு அதாவது Current Account , பண கடன் கணக்குகள் மற்றும் மிகைப்பற்றினை கணக்குகள் மீதான கட்டுப்பாடுகள் உடனடியாக நீக்கப்பட உள்ளதாக அறிவித்துள்ளது.

ஏடிஎம்

ஏடிஎம்

நடப்பு கணக்கு, பண கடன் கணக்குகள் மற்றும் மிகைப்பற்றினை கணக்குகளின் ஏடிஎம் வித்டிராவல் அளவுகளை இன்று முதல் நீக்கப்பட உள்ளதாக அறிவித்துள்ளது ரிசர்வ் வங்கி.

கட்டுப்பாடுகள்

கட்டுப்பாடுகள்

தற்போது ஒரு நாளுக்கு அதிகப்படியாக 10,000 ரூபாயும், ஒரு வாரத்திற்கு 24,000 ரூபாய் வரை வங்கி ஏடிஎம்களில் பணம் எடுத்துக்கொள்ளலாம். பணமதிப்பிழப்பு நடவடிக்கையைச் செயல்படுத்தப்பட்ட காலகட்டத்தில் ஒரு நாளுக்கு 2000 ரூபாய் மட்டுமே எடுக்க முடியும் என மத்திய அரசு அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

முழுமையாக நீக்கம்
 

முழுமையாக நீக்கம்

பிப்ரவரி 1ஆம் தேதி பட்ஜெட் அறிக்கையில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மத்திய அரசு 2 நாட்கள் முன்கூடியே அறிவித்துள்ளது.

காங்கிரஸ் பாஜக

காங்கிரஸ் பாஜக

மேலும் பாஜக தலைமையிலான மத்திய அரசு காங்கிரஸ் ஆட்சியில் இந்திய பொருளாதார மிகப்பெரிய சரிவை சந்தித்தது எனக் குறிப்பிட்டது, இது முழுமையாகத் தவறு என முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் ஆகியோர் செய்தியாளர்கள் முன் நிரூபனம் செய்து வருகின்றனர்.

இத்தகைய தருணத்தில் மத்திய அரசு ஏடிஎம் கட்டுப்பாடுகளைப் பிப்ரவரி 1 முதல் முழுமையாக நீக்க உள்ளதாக அறிவித்துள்ளது.

 

பேஸ்புக்

இந்த பதிவை உங்கள் நண்பருக்கு ஷேர் செய்யலாம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Read more about: atm ஏடிஎம்
English summary

ATM caps will be removed completely from Feb 1

ATM caps will be removed completely from Feb 1
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X