தனிஒருவனின் நிதி கடமைகள் யாவை..?

ஒவ்வொரு மனிதனும் தனது வாழ்வில் பல பொறுப்புகள் இருக்கும், ஆனால் அனைத்திற்கும் அடிப்படையாக இருப்பது நிதி சார்ந்த பொறுப்புகள் என்பதை எந்த வகையிலும் நாம் மறுக்க முடியாது.

சென்னை: ஒவ்வொரு மனிதனும் தனது வாழ்வில் பல பொறுப்புகள் இருக்கும், ஆனால் அனைத்திற்கும் அடிப்படையாக இருப்பது நிதி சார்ந்த பொறுப்புகள் என்பதை எந்த வகையிலும் நாம் மறுக்க முடியாது.

இப்படி முக்கியமான நிதி பொறுப்புகளைப் பற்றித் தெரிந்து வைத்திருக்க வேண்டுமா..? இதுவே உங்களது நிதி ஆதாரங்களை வளர்க்க முக்கியப் பங்காற்றும் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா..? சரி ஒவ்வொரு மனிதனுக்கான நிதி பொறுப்புகள் எவை என்பதை நாம் இங்குப் பார்ப்போம்,

வரி செலுத்தும் கடமை

வரி செலுத்தும் கடமை

ஒரு பொறுப்பான குடிமகனாக இருக்க நீங்கள் வரியைச் சரியான நேரத்தில் கட்டுவது இன்றியமையாததாக இருக்கிறது.

நீங்கள் செலுத்தும் வருமான வரி தேசத்தின் கட்டமைப்பை சீர்ப்படுத்த அரசுக்குப் பயன்படுகிறது. ஆனால், தற்பொழுது 3 சதவீத மக்கள் மட்டுமே வரிப் பணத்தை முழுவதுமாகச் செலுத்துகிறார்கள்.

 

நேர்மையாக இருங்கள்

நேர்மையாக இருங்கள்

காப்பீடு கொள்கை திட்டத்தில் படிவங்களைப் பூர்த்திச் செய்யும் போது நேர்மையுடன் இருங்கள்.

காப்பீடு மற்றும் பிரீமியம் தொகையானது நீங்கள் கொடுக்கும் தகவலைப் பொறுத்தது. தவறான தகவலை பகிரும் நேரத்தில் உங்களது காப்பீடு புறக்கணிக்கப்படலாம்.

 

சரியான நேரத்தில் கட்டணத்தைச் செலுத்த வேண்டும்

சரியான நேரத்தில் கட்டணத்தைச் செலுத்த வேண்டும்

தாமதமாக அல்லது எதிர்பார்க்கப்பட்ட நேரத்தைத் தாண்டிய கட்டண பாக்கிகள் உங்கள் கிரெடிட் ஸ்கோரை மட்டும் பாதிக்காமல் உங்கள் நிலுவைத் தொகையின் மீதும் அபராதம் அல்லது வட்டியினை வசூலிக்க வழி வகுக்கும்.

இது தவிர, கிரெடிட் கார்டு பாக்கிகளில் தாமதமாகப் பணம் செலுத்துவது உங்களின் நிதி நிலைமையைத் தடம் புரள வைக்கும்.

 

வெற்றுப் படிவத்தில் கையெழுத்திடக் கூடாது

வெற்றுப் படிவத்தில் கையெழுத்திடக் கூடாது

நீங்கள் கையெழுத்திடும் எந்த ஒரு காகிதத்திற்கும் உங்களுக்குப் பொறுப்பு இருப்பதால், உங்களின் முன்னிலையில் படிவத்தைப் பூர்த்திச் செய்து கையெழுத்திட வேண்டும்.

வெற்றுப் படிவத்தில் கையெழுத்திடக் கூடாது. இதனால் பல மோசடிகளைத் தடுக்க முடியும்.

 

குடும்ப உறுப்பினர்களை வாரிசாக நியமனம் செய்யுங்கள்

குடும்ப உறுப்பினர்களை வாரிசாக நியமனம் செய்யுங்கள்

காப்பீட்டுக் கொள்கைகள் மற்றும் முதலீட்டு ஆவணங்களில் குடும்ப உறுப்பினர்களை வாரிசாக நியமனம் செய்யுங்கள். இதனால் குடும்பத்தில் பூசல்கள் ஏற்படாமல் தவிர்க்கலாம்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+