மொத்த உள்நாட்டு உற்பத்தி கணிப்புயூனிவர்சல் பேசிக் இன்கம்டிஜிட்டலுக்கு முன்னுரிமைகருப்புப் பணம்உலகளாவிய காரணி
2017 ஆண்டின் பொருளாதாரச் சர்வேயினைத் தலைமை பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்பிரமணியன் வடிவமைத்துள்ளார்.
இப்போது நாம் பொருளாதாரச் சர்வேயில் இருந்து கவனிக்க வேண்டிய முக்கிய அம்சங்களைப் பார்ப்போம்.
மொத்த உள்நாட்டு உற்பத்தி கணிப்பு
நடப்பு நிதி ஆண்டில் மத்திய புள்ளியல் அமைப்புச் சதவீதம் 7.1 சதவீதம் எனக் குறைவான அளவில் மொத்த உள்நாட்டு உற்பத்தி விதிதத்தைக் காண்பித்து உள்ளது. செல்லா ரூபாய் நோட்டுகள் அறிவித்ததே இதற்கான முக்கியக் காரணம் என்று வல்லுநர்கள் கூறுகின்றனர்.
எனவே அடுத்த ஆண்டின் பொருளாதாரச் சர்வேயில் வளர்ச்சி விகிதம் கண்டிப்பாகப் பெறும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தும்.
யூனிவர்சல் பேசிக் இன்கம்
தனி நபர்கள், வீடு இல்லாதவர்கள், மற்றும் பிறருக்கு மானியங்களை நேரடியாக வங்கி கணக்கிற்கு இலவசமாக அளித்து உதவுவதே யுனிவர்சல் பேசிக் இன்கம் திட்டத்தின் நோக்கம் ஆகும். எனவே தான் இது யுனிவர்சல் என்ற பெயரை எடுத்துள்ளது.
அரசாங்கத்தின் கொள்கையில் இதனைச் சேர்க்கும் பொறுப்பைச் சுப்பிரமணியன் தலைமையிலான குழு செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
டிஜிட்டலுக்கு முன்னுரிமை
சென்ற ஆண்டு ஜன் தன் யோஜனா, ஆதார் போன்றவற்றுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்ட பொருளாதாரச் சர்வேயில் இந்த ஆண்டு டிஜிட்டல் பொருளாதாரத்திற்கு முன்னுரிமை அளிக்கப்படுகின்றது.
கருப்புப் பணம்
செல்லா ரூபாய் நோட்டுகள் அறிவித்தது போன்ற செயல்களை மோடி அரசு எடுத்துள்ளதினால் பல பினாமி சொத்துகள் கையகப்படுத்தப்பட்டு வருகின்றன.
எனவே இந்தச் சர்வேயில் கருப்புப் பணம் முக்கியமானதாகப் பார்க்கப்படும்.
உலகளாவிய காரணி
டிரம்ப்பின் புதிய அமெரிக்கப் பாதுகாப்புவாதம் கொள்கையால் இந்தியாவின் ஏற்றுமதி சந்தை பெறும் அளவில் பாதிக்கப்படும். எனவே பொருளாதாரச் சர்வேயில் ஏற்றுமதி மற்றும் வெளிநாட்டு வர்த்தக ஊக்குவிப்புச் சலுகைகள் பரிந்துரைக்கப்படலாம்.


Click it and Unblock the Notifications