PayTM நிறுவனம் நொய்டா (உத்திரப் பிரதேசம்) தலைமையிடமாகக் கொண்டு மின்னணு வர்த்தகத்தைச் செயல்படுத்தும் நிறுவனம் ஆகும்.
கடந்த நவம்பர் மாதம் 500 ரூபாய் மற்றும் 1000 ரூபாய் செல்லாது எனப் பிரதமர் மோடியின் அதிரடி அறிவிப்பால் பணமில்லா மின்னணு பரிவர்த்தனை நாடு முழுவதும் அதிகரித்து வருகிறது. இதற்கு மேலும் அழகு சேர்ப்பது போல் விஜய் சேகர் சர்மாவின் PayTM மிகவும் வேகமாக வளர்ந்து வருகிறது.

PayTM நிறுவனம் நொய்டா (உத்திரப் பிரதேசம்) தலைமையிடமாகக் கொண்டு மின்னணு வர்த்தகத்தைச் செயல்படுத்தும் நிறுவனம் ஆகும். PayTM பயன்பாட்டை ஆண்ட்ராய்டு, விண்டோஸ் மற்றும் ஐஓஎஸ் இயக்க முறைமைகளில் இயக்க முடியும்.
முக்கியச் சேவைகள்
PayTM மூலம் பயனாளிகள் விமான டிக்கட்டுகள், மொபல் ரீசார்ஜ், டிடிஎச், பிராட்பேண்ட் கட்டணம், மின்சாரக் கட்டணத்தையும் பதிவு செய்யச் செயல்படுத்தப்படுகிறது. மேலும் இந்தியன் ஆயில் பெட்ரோல் பங்குகளில் எரிபொருளைப் பெறவும், பிவிஆர் சினிமாஸ் மூலம் சினிமா டிக்கெட்டுகளையும் வாங்க முடியும்.
மேமெண்ட்ஸ் வங்கி
இந்திய ரிசர்வ் வங்கியின் ஒப்புதலுக்குப் பின்னர் PayTM payment bank வங்கி மூலமாகப் பணப் பரிவர்த்தனை செய்ய இயலும் என உறுதி அளிக்கப்பட்டுள்ளது. எனவே, விரைவில் PayTM payment bank நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
5 பில்லியன் டாலர்
பல இழப்புகளைச் சந்தித்த போதிலும், PayTM ன் மதிப்பு 5 பில்லியன் டாலராக மதிப்பிடப்பட்ட பல வலுவான காரணங்கள் உள்ளன.
PayTM ன் உயர் மதிப்பீடு பற்றி PayTM பயன்படுத்துபவர்களிடம் காரணம் கேட்கப்பட்டது. பங்களிப்பாளர்கள் பல்வேறு உண்மை உளநிலை தெளிவுகளை மதிப்பீட்டு தெளிவுபடுத்தினர்.
இங்கே, PayTM ஏன் அதிகமாக மதிப்பிடப்படுகிறது என்பதற்கு இரண்டு வலுவான காரணங்கள் கொடுக்கப்பட்டு உள்ளன.
பயனாளர்கள் எண்ணிக்கை
பத்து கோடி பயனாளர்களிடம் இருந்து இந்திய ரூபாய் மதிப்பில் நாள் ஒன்றுக்கு ஒரு ரூபாய் வீதம் சம்பாதிக்க முடியும் எனக் கற்பனை செய்து கொள்ளுங்கள்.
இதுவரை PayTM பயன்பாட்டை 130 மில்லியன் நபர்கள் பதிவிறக்கம் செய்துள்ளனர். இது 13 கோடி பயனாளர்கள் எனக் குறிப்பிடுகிறது. 10 கோடி பயனாளர்களிடம் இருந்து வருவாய் ஒரு நாளில் 10 கோடி எனத் தோராயமாகக் கணக்கிடப்படுகிறது.
அடங்கப்பா..!!
10 கோடி பயனாளிகளிடம் இருந்து ஒரு நாளில் ஒரு ரூபாய் வீதம் பெறப்படுகிறது எனில், ஒரு வருடத்திற்கு ரூபாய் 3,650 கோடி PayTM க்குக் கிடைக்கிறது.
மேலும் ஒவ்வொரு முறையும் வாலட்டில் நாம் பணப் பரிவர்த்தனை செய்வதன் காரணமாக ரூபாய் 18,000 கோடி PayTM க்குக் கிடைக்கிறது.
ஒன்97 நிறுவனம்
விஜய் சேகர் சர்மாவின் PayTM நிறுவனத்தில், தற்போது ஒன்97 - 21.33 %, SAIF பார்ட்னர்ஸ் - 30.81 %, ஜாக் மா தலைமையிலான அலிபாபா மற்றும் அலிபே - 40% பங்குகளைக் கொண்டு உள்ளது.
அலிபாபா
மேலும் அலிபாபா குழுமம் 700 மில்லியன் டாலரை முதலீடு செய்து உள்ளது.
சீன இ-காமர்ஸ் அடுத்த ஆண்டுத் தொடக்கத்தில், முக்கியமாக இந்தியாவில் இ-டெய்லிங் வர்த்தகத்தையும் தொடங்கத் திட்டமிட்டுள்ளது. PayTM யைப் பயன்படுத்தி வாகனங்களையும் அறிமுகம் செய்ய உள்ளது.
தீர்வு
இந்நிலையில் வருடத்திற்கு 18,000 கோடி ரூபாய் வருமானம், SAIF பார்ட்னர்ஸ் மற்றும் அலிபாபா போன்ற மிகப்பெரிய முதலீட்டாளர்கள், புதிய வர்த்தகங்களைத் துவங்குவதற்கான அதிப்படியான வாய்ப்புகள், மத்திய அரசின் பணமில்லா பொருளாதாரத்தை உருவாக்கும் திட்ட வடிவங்கள் ஆகியவை பேடிஎம் நிறுவனத்தின் மதிப்பீட்டை மிகப்பெரிய அளவில் உயர்த்தியுள்ளது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications