ஆயுதங்களைத் தயாரிக்கும் நிறுவனமான ரிலையன்ஸ் டிபென்ஸ் மற்றும் இன்ஜினியரிங் லிமிடெட் (RDEL) நிறுவனம் புதிதாக இந்திய பாதுகாப்பு துறைக்குத் தேவையான 14 அதிவேக ரோந்து கப்பல்களைத் தயாரிக்கும் ஒப்பந்தத்தைப் ப
அனில் அம்பானி தலைமை வகிக்கும் ரிலையன்ஸ் குழுமத்தின் ராணுவத்தில் பயன்படுத்தும் ஆயுதங்களைத் தயாரிக்கும் நிறுவனமான ரிலையன்ஸ் டிபென்ஸ் மற்றும் இன்ஜினியரிங் லிமிடெட் (RDEL) நிறுவனம் புதிதாக இந்திய பாதுகாப்பு துறைக்குத் தேவையான 14 அதிவேக ரோந்து கப்பல்களைத் தயாரிக்கும் ஒப்பந்தத்தைப் பெற்றுள்ளது.
இந்த ஒப்பந்தத்தின் மொத்த மதிப்பு 916 கோடி ரூபாயாகும்.
ரிலையன்ஸ் குழுமத்தின் ரிலையன்ஸ் இன்பரா நிறுவனத்தின் முழுமையான கட்டுப்பாட்டில் உள்ளது RDEL.
அதிவேக ரோந்து கப்பல்
இந்தியா பாதுகாப்பு துறைக்குத் தேவையான நடுத்திர ரகத்தைச் சேர்ந்த இந்த அதிவேக ரோந்து கப்பல்கள் கடலோர பாதுகாப்புப் பணிகள், கடத்தல்களைத் தடுக்கவும், பாதுகாப்புப் பணிகள், EEZ பகுதியின் ரோந்து பணிகளுக்குப் பயன்படுத்தப்பட உள்ளது. மேலும் இவை எல்லையோர பாதுகாப்பின் முதல் வரி என்பது குறிப்பிடத்தக்கது.
போட்டி
இத்தகைய முக்கியமான அதிவேக ரோந்து கப்பல்கள் இந்திய பாதுகாப்பு துறைக்குத் தேவைப்படும் நிலையில், இதனை இந்தியாவிலேயே தயாரிக்க முடிவு செய்துள்ளது மத்திய அரசு.
இதன் படி 916 கோடி ரூபாய் மதிப்பிலான இந்த ஆர்டரை பெற ரிலையன்ஸ் டிபென்ஸ் மற்றும் இன்ஜினியரிங் லிமிடெட் உடன் எல் அண்ட் டி, கொச்சின் ஷிப்யார்டு லிமிடெட், கோவா ஷிப்யார்டு லிமிடெட், கார்டன் ரீச் ஷிப்பில்டர்ஸ் அண்ட் இன்ஜினியர்ஸ் லிமிடெட் எனப் பல தனியார் மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் போட்டி போட்டி போட்டது.
முதல் முறை
இப்போட்டியில் ரிலையன்ஸ் டிபென்ஸ் மற்றும் இன்ஜினியரிங் லிமிடெட் வென்றது மட்டும் அல்லாமல் இந்திய வரலாற்றிலேயே முதல் முறையாக இந்திய ஆயுத படைக்குத் தேவையான ரோந்து கப்பல்களைத் தயாரிக்க ஒரு தனியார் நிறுவனத்திற்குச் சென்றடைந்துள்ளது.
ரிலையன்ஸ் டிபென்ஸ் மற்றும் இன்ஜினியரிங் லிமிடெட்
இந்த 916 கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தத்தைப் பெற்றதன் மூலம் ரிலையன்ஸ் டிபென்ஸ் மற்றும் இன்ஜினியரிங் லிமிடெட் 14 அதிவேக ரோந்து கப்பல்களை வடிவமைத்து முழுமையாகத் தயாரிக்க உள்ளது.
வெற்றி
வெற்றி
ரிலையன்ஸ் ஷிப்யார்டு நிறுவனம் துவங்கப்பட்டுக் காலியாகவே இருந்த நிலையில் தற்போது உற்பத்திக்கும் தயாரிப்புக்கும் குறைவில்லாமல் பணிகளைத் துவங்க உள்ளது, இந்த ஒப்பந்தம் மூலம் அனில் அம்பானி கப்பல் தயாரிப்புப் பிரிவு வர்த்தகத்திலும் வெற்றிபெற்றுள்ளார்
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications