ஒரு மாத உயர்வில் ரூபாய் மதிப்பு.. 'பட்ஜெட் 2017' எதிரொலி..!

மும்பை: நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்படும் பட்ஜெட் எதிரொலியின் காரணமாகப் புதன்கிழமை வர்த்தகச் சந்தையில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு இன்று 1 மாத உயர்வைச் சந்தித்துள்ளது.

இன்றைய வர்த்தகத் துவக்கத்தில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 67.65 ஆக உயர்ந்துள்ளது.

செவ்வாய்க்கிழமை வர்த்தக முடிவில் இதன் மதிப்பு 67.87 ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

ஒரு மாத உயர்வில் ரூபாய் மதிப்பு.. 'பட்ஜெட் 2017' எதிரொலி..!

மேலும் மும்பை பங்குச்சந்தை மகிப்பெரிய உயர்வில் துவங்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கணிசமான உயர்வுடன் மட்டுமே துவங்கியுள்ளது முதலீட்டாளர்களை வருத்தம் அடையச் செய்துள்ளது.

புதன்கிழமை வர்த்தகத் துவக்கத்தில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு வெறும் 13 புள்ளிகள் மட்டுமே உயர்ந்து 26,985 புள்ளிகளை அடைந்திருந்தது. அதேபோல் நிஃப்டி குறியீடு 10 புள்ளிகள் உயர்வுடன் 8,571.50 புள்ளிகளுடன் இன்றைய வர்த்தகம் துவங்கியுள்ளது.

இன்றைய வர்த்தகம் முழுவதும் பட்ஜெட் அறிக்கையைப் பொறுத்து அமையும்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+