பட்ஜெட் 2017 தாக்கத்தால் எந்தெந்த பொருட்களின் விலை உயரும் குறையும்..!
புதன்கிழமை இன்று தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டின் தாக்கத்தால் என்ன பொருட்கள் எல்லாம் விலை உயரும், என்ன பொருட்கள் எல்லாம் விலை குறையும் என்று தெரியுமா..?
ஒவ்வொரு ஆண்டும் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் போது சில பொருட்களின் விலை உயரும் அதே நேரம் சில பொருட்களின் விலை குறையும்.
எனவே பட்ஜெட் 2017 தாக்கத்தால் விலை உயரும் பொருட்கள் மற்றும் விலை குறையும் பொருட்கள் எவை என்று இங்குப் பார்ப்போம்.
விலை உயரும் பொருட்கள்
மொபைல்கள் சுற்றுப் பலகைகள்
சுருட்டு
சிகரெட்டுகள்
மெல்லும் புகையிலை பொருட்கள்
பான் மசாலா
விலை குறையும் பொருட்கள்
பையோமெட்ரிக் ஸ்கேனர் ரயில்வே இ-டிக்கெட் ஃபிங்கர் ப்ரிண்ட் ரீடர் சூரிய சக்தியில் இயங்கும் செல்கள் மைக்ரோ ஏடிஎம் இயற்கை எரிவாயு
பட்ஜெட்டினால் லாபம் பெறுபவர்கள்
விவசாயிகள், ரியல் எஸ்டேட், நுகர்வோர் பொருட்கள் மற்றும் வாகன துறை மற்றும் வங்கிகளுக்கு 2017 பட்ஜெட் சாதகமாக அமைந்துள்ளது.
பட்ஜெட்டினால் பின்னடைவு பெற்றவர்கள்
2017 பட்ஜெட் கிராமப் புரத்தை சார்ந்தே இருந்ததால் மருந்து பொருட்கள் தயாரிக்கும் நிறுவனங்களான சன் பார்மா, ரெட்டி லெபாரட்ரிஸ் நிறுவனங்கள் பெறும் ஏமாற்றத்தை சந்தித்துள்ளன.