டெல்லி: முன்னாள் மத்திய அமைச்சர் அகமது மறைவால் இன்று பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதில் இழுபறி நிலவி வந்த நிலையில் மத்திய நிதியமைச்சர் இன்று முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
அகமது மறைவின் எதிரொலியாகக் காங்கிரஸ் கட்சியினர் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்த நிலையில் இன்று நாடாளுமன்றத்தில் எதிர்ப்புகளையும் தாண்டி பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார்.

ஆனால் அரைமணி நேரம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது , இதன் மூலம் 11 மணிக்குப் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார்.
மேலும் இன்றைய நாடாளுமன்றம் கூட்டம் துவங்குபோது மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் இ.அகமத் அவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்படும் எனவும் செய்திகள் வெளியாகியுள்ளது.
மேலும் திட்டமிட்டபடி இன்றே பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என அறிவித்தார் சபாநாயகர், இதனுடன் பட்ஜெட்டுக்கு அங்கீகாரம் வழங்கியது மத்திய அமைச்சரவை.


Click it and Unblock the Notifications