20 வருட வீட்டுக் கடன் திட்டத்திற்கு ஒப்புதல்: பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜ்னா
மத்திய அரசு புதன்கிழமை கிராமப்புற வீட்டுக் கடன் திட்டமான பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜ்னாவின் கீழ் கடன் இணைப்பு மானிய திட்டத்தின் வாயிலாக 15 முதல் 20 வருடக் கடன் சேவையை அளிக்க நாடாளுமன்றத்தில் ஒப்புதல் அள
மத்திய அரசு புதன்கிழமை கிராமப்புற வீட்டுக் கடன் திட்டமான பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜ்னாவின் கீழ் கடன் இணைப்பு மானிய திட்டத்தின் வாயிலாக 15 முதல் 20 வருடக் கடன் சேவையை அளிக்க நாடாளுமன்றத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

இந்த 20 வருடக் கடன் திட்டத்திற்காக மத்திய அரசு பட்ஜெட் 2017 அறிக்கையில் 1000 கோடி ரூபாய் நிதிஒதுக்கீடு செய்துள்ளது.
மேலும் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜ்னா திட்டத்தில் MIG பிரிவு, அதாவது நடுத்தர வருமானம் பெறும் மக்களுக்கான தனிப்பட்ட கடன் திட்டத்தையும் உருவாக்கியுள்ளது. இதற்கும் ஒப்புதல் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இக்கடன் திட்டத்திற்கான வட்டியை மட்டுமே மத்திய அரசு மானியமாக அளிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் குறைந்த வருமானம் உடையோருக்கான கடன் திட்டத்தை CLSS என அழைக்க உள்ளதாகவும் கூறியுள்ளது.


Click it and Unblock the Notifications