வருமான வரி விதிப்பில் தளர்வு.. ரூ.2.5 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வருமானத்திற்கு 5% வரி..!

டெல்லி: 2017-18 நிதியாண்டுக்கான பட்ஜெட் அறிக்கையில் சாமானிய மக்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் வருமான வரி விதிப்பு அளவுகளில் தளர்வு செய்யப்பட்டுள்ளது.

அதுவும் மத்திய அரசின் பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பின் வருமான வரி தளர்வுகளை மக்கள் எதிர்பார்க்கும் ஒன்றாக மாறிவிட்டது. மக்களின் எதிர்பார்ப்பு வீணாகவில்லை என்ற சொல்லவேண்டும்.

5 சதவீத தளர்வு

5 சதவீத தளர்வு

பட்ஜெட் 2017 நிதி அறிக்கையில் 2.5 லட்சம் ரூபாய் முதல் 5 லட்சம் ரூபாய் வருமானம் உடையோருக்கான வருமான விரி விதிப்பு 10 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.

கூடுதல் வரி

கூடுதல் வரி

மேலும் 50 லட்சம் முதல் 1 கோடி ரூபாய் வரையிலான வருமான உடையவர்கள் 10 கூடுதல் வரியை செலுத்த வேண்டும் எனவும் ஜேட்லி தெரிவித்துள்ளார்.

பிற அளவுகளில் எவ்விதமான மாற்றமுமில்லை என்றும் நிதியமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார்.

 

வருமான வரி விதிப்பு

வருமான வரி விதிப்பு

இந்தியாவில் தற்போது வருடத்திற்கு 2.5 லட்சம் ரூபாய் அளவிலான வருமானத்தைப் பெறுவோர் எவ்விதமான வரியையும் செலுத்த தேவையில்லை.

250,001 முதல் 5,00,000 ரூபாய் வரையில் வருடாந்திர வருமானம் பெறுவோர் 10% வரியும், 5,00,001 முதல் 10,00,000 ரூபாய் 20% வரியும் மற்றும் 10 லட்சம் ரூபாய்க்கும் அதிக வருமானம் உடையோர் 30% வரி செலுத்த வேண்டும்.

 

மூத்த குடிமக்கள்

மூத்த குடிமக்கள்

மேலும் மூத்த குடிமக்களுக்கான வருமான வரி விதிப்பில் எவ்விதமான மாற்றமும் இல்லை. தற்போதைய அளவிடுகள் 2017-18 நிதியாண்டிலும் தொடரும்.

 சேமிப்பு

சேமிப்பு

இப்புதிய தளர்வுகள் மூலம் வருடத்திற்கு 5 லட்சம் ரூபாய் வரையிலான தனிநபர் ஒருவர் வருடத்திற்கு 12,500 ரூபாய் வரை சேமிக்க முடியும்.

மத்திய அரசு திட்டம்

மத்திய அரசு திட்டம்

இந்த வரி குறைப்பின் மூலம் வருமான வரியை அதிகப்படியானோர் செலுத்துவார்கள் என ஜேட்லி கூறினார்.

இதன் அரசின் வரி வருமானம் மிகப்பெரிய அளவில் அதிகரிக்கவில்லை என்றாலும் குறைந்த அளவிலாவது அதிகரிக்கும் என்பது மத்திய அரசின் கணக்கு.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+