பட்ஜெட் 2017-2018: மாநிலங்களவையில் இருந்து நேரலை இணைய ஒளிபரப்பு..! (வீடியோ)

மாநிலங்களவையில் இருந்து நேரலை இணைய ஒளிபரப்பு வீடியோ

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பெறும் மதிப்புடைய பழைய ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று மத்திய அரசு அறிவித்ததினால் பட்ஜெட் 2017-ல் வரி செலுத்துவோருக்கு வருமான வரியில் சிலவற்றுக்கு விலக்கு அளிக்கப்படும் என்று கூறப்படுகின்றது.

நிதி அமைச்சர் அருண் ஜெட்லி பின் வரும் விகிதங்கள் எல்லாம் பரிசீலிக்க வாய்ப்புள்ளது. இன்னும் சற்று நேரத்தில் பின் வருபவையெல்லாம் பட்ஜெட்டில் இடம்பெறுமா என்று இங்குப் பார்ப்போம்.


மருத்துவக் கொடுப்பனவு

ஊழியர்களுக்கு அளிக்கப்படும் மருத்துவக் கொடுப்பனவுக்கு அளிக்கப்படும் வரிவிலக்குத் தற்போது இருக்கும் 15,000 ரூபாயில் இருந்து உயர்த்தி 50,000 ரூபாய் வரை விலக்கு அளிக்கலாம்.

பயணப்படி / போக்குவரத்துக் கொடுப்பனவு

பயணப்படி / போக்குவரத்துக் கொடுப்பனவு போன்றவற்றுக்கு 19,200 ரூபாய் வரை உள்ள வரி விலக்க வரம்பை 36,000 ரூபாய் வரை உயர்த்தலாம்.

உணவு

நிறுவனங்கள் தங்களது ஊழியர்களுக்கு அளிக்கும் உணவுகளில் 50 ரூபாய்க்கு அதிகமாகச் செலவு செய்தால் வரி செலுத்த வேண்டும். தற்போது அதனை உயர்த்தி 100 ரூபாய் வரை விலக்கு அளிக்கலாம்.

விடுமுறை பயணச் சலுகை

விடுமுறை பயணச் சலுகைகளில் இந்தியாவிற்குள் மட்டும் பயணம் செய்தால் மட்டுமே சலுகை உள்ளது. அதனை வெளிநாட்டுப் பயணங்களுக்கும் அளிக்கலாம்.

வீட்டுக் கடன்

வீட்டுக் கடன் வாங்கியவர்களுக்கு 2 லட்சம் வரை செலுத்தும் வட்டிக்கு விலக்கு உண்டு. அதனை 5 லட்சம் வரை உயர்த்தலாம்.

சொத்து

தனிநபர் ஒருவருக்கு இரண்டு வீடு இருக்கின்றது என்றால் ஒரு வீட்டினை தான் பயன்படுத்தி வந்து இன்னொரு வீட்டை வாடகைக்கு அளிக்கிறார் என்றால் அதில் இருந்து பெறப்படும் வருமானத்திற்கு வரி செலுத்த வேண்டும். இப்போது மக்கள் இருக்கும் சூழலில் வேலை தேடி பிற நகரங்களுக்கு மக்கள் செல்வதால் இரண்டு வீடு இருக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். இந்தச் சிக்கலைத் தீர்க்க வழிவகைச் செய்ய வேண்டும்.

பிரிவு 80 சி

1.5 லட்சம் வரை செய்யும் முதலீடுகள் மற்றும் செலவுகளுக்குப் பிரிவு 80 சி-ன் கீழ் வரி விலக்கு உண்டு. அதனை 3 லட்சம் வரை உயர்த்தலாம்.

சம்பளம் பெறும் ஊழியர்கள்

சம்பளம் பெறும் ஊழியர்களுக்கு நிலையான வரி பிடித்தம் செய்யலாம் என்ற முறையை மீண்டும் அறிமுகப்படுத்தலாம்.

தேசிய ஓய்வூதிய திட்டம்

தேசிய ஓய்வூதிய திட்டம் போன்றவற்றின் முதலீட்டில் இருந்து பெறும் லாபத்திற்கு முழு வரி விலக்கு அளிக்க வேண்டும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

LIVE Webcast || Rajya Sabha Budget 2017 Session- 242

Budget 2017 LIVE Webcast || Rajya Sabha Budget 2017 Session- 242
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X