விரைவில் புதிய ரயில்வே கொள்கை அறிவிக்கப்படும். அதன் மூலம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகள் பெருகும்.
ரயில்வே துறைக்கு 2017-2018ம் நிதி ஆண்டில் 131,000 கோடி முதலீடு செய்ய இருப்பதாகவும், ரயில்வேஸ், சாலைகள், துறைமுகங்கள் மற்றும் உள்நாட்டு விமானப் போக்குவரத்துத் துறையில் முதலீடுகளை ஒருங்கிணைக்க இருப்பதாகவும் அருண் ஜேட்லி மத்திய பட்ஜெட்டில் தெரிவித்துள்ளார்.

விரைவில் புதிய ரயில்வே கொள்கை அறிவிக்கப்படும். அதன் மூலம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகள் பெருகும்.
ரயில் பாதை
3,500 கிலோ மீட்டர் துரத்திற்குக் கூடுதலாக ரயில்வே பாதை அமைக்கும் பணி துவங்கப்படும் என்றும் அதில் 2,800 கிலோ மீட்டாருக்கான பணிகள் இந்த ஆண்டே முடிக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர்.
சுற்றுலா மற்றும் புனித யாத்திரை
சுற்றுலா மற்றும் புனித யாத்திரைகளுக்காக அர்ப்பணிக்கப்பட்ட ரயில்கள் அறிமுகப்படுத்தப்படும்.
ஆல் இல்லா ரயில்வே கிராசிங்
ரயில்வே பாதுகாப்பு நிதிக்காக 1 லட்சம் கோடி ரூபாய் கார்பஸ் வழங்கப்படும். 2020-ம் ஆண்டிற்குள் ஆல் இல்லா ரயில்வே கிராசிங்குகள் இருக்காத வண்ணம் ரயில்வே பாதைகள் அமைக்கப்பட்டு இருக்கும் என்றும் ஜெட்லி தெரிவித்துள்ளார்.
புதிய ரயில்வே நிலையங்கள்
2017-2018ம் நிதி ஆண்டில் 25 ரயில்வே நிலையங்கள் புதிதாக அமைக்கப்படும், 500 ரயில் நிலையங்கள் மாற்றுத் திறனாளிகள் எளிதாகப் பயணம் செய்யும் வகையில் வசதிகள் அதிகரிக்கப்படும். 7,000 ரயில் நிலையங்களில் சூரிய மின்சக்தி வசதிகள் செய்யப்படும்.
2019-ம் ஆண்டிற்குள் எல்லா ரயில் பெட்டிகளிலும் பையோ கழிப்பறைகள் பொருத்தப்படும்.
இணையதளத்தில் டிக்கெட் புக் செய்தால் சேவை வரி இல்லை
ஐஆர்சிடிசி இணையதளம் மூலம் ரயில் டிக்கெட் புக் செய்பவர்களுக்கு உள்ள சேவை வரி முழுமையாகத் திருப்பப்பெறப்படுகின்றது. எனவே ஐஆர்சிடிசி இணையத்தில் ரயில் டிக்கெட் புக் செய்தால் டிக்கெட் புக் செய்தால் சேவை வரி இல்லை.
ரயில்வே நிர்வாகம் லாஜிஸ்டிக்ஸ் நிறுவனங்களுடன் இணைந்து சில சரக்குகளுக்கு மட்டும் ஒருங்கிணைந்த போக்குவரத்து சேவையை அளிக்கும்.
மெட்ரோ ரயில்கள்
மெட்ரோ ரயில்களுக்குப் புதிய கொள்கைகள் விதிக்கப்படும். நிதி மற்றும் புதுமையான மாதிரிகளில் கவனம் செலுத்தப்படும்.
ரயில் டிக்கெட் கட்டணங்கள்
தரமான சேவை, செலவு , சமூகப் பொறுப்பு, போட்டியைப் பொருத்து ரயில் டிக்கெட் கட்டணங்கள் முடிவு செய்யப்படும்.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?



Click it and Unblock the Notifications