பேஸ்புக் நிறுவனத்தின் தலைவரான மார்க் ஜூக்கர்பெர்க், ஜியோ நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானிக்கு மிகப்பெரிய நன்றி கடிதம் எழுதியுள்ளார்.
டெல்லி: பேஸ்புக் நிறுவனத்தின் தலைவரான மார்க் ஜூக்கர்பெர்க், ஜியோ நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானிக்கு மிகப்பெரிய நன்றி கடிதம் எழுதியுள்ளார்.
என்னடாது கொஞ்சம் கூடச் சம்மந்தம் இல்லாமல் இருக்கே என்று நினைக்காதீர்கள். சம்மந்தம் இருக்கு..!
ஜியோ அறிமுகம்
முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ இந்தியாவில் மிகப்பெரிய டிஜிட்டல் புரட்சியை ஏற்படுத்தியுள்ளதை நாம் மறுக்க முடியாது.
குறிப்பாக இண்டர்நெட் அதிகம் பயன்படுத்தாத வாடிக்கையாளர்கள் பல பேர் ஜியோவின் இலவசம் ஆஃபர் மூலம் ஒரு மாதத்திற்குக் குறைந்தபட்சம் 10 ஜிபி இண்டர்நெட் பயன்படுத்தியதாக ஆய்வுகள் கூறுகிறது.
பேஸ்புக் நிறுவனத்திற்கு லாபம்
இந்திய சந்தையில் ஜியோவின் அறிமுகத்தின் மூலம் பேஸ்புக் இந்தியா நிறுவனத்தின் மொத்த லாபத்தின் அளவு 128 சதவீதம் வரை உயர்ந்து 3.57 பில்லியன் டாலரைப் பெற்றுள்ளது. கடந்த நிதியாண்டில் இதன் அளவு வெறும் 1.56 பில்லியன் டாலர் தான்.
இது டிசம்பர் 31ஆம் தேதியுடன் முடிவடைந்த காலாண்டு முடிவுகளின் நிலை.
மிகப்பெரிய பங்கு
அக்டோபர் முதல் டிசம்பர் மாதம் வரையிலான காலத்தில் ஜியோவின் இலவச இண்டர்நெட் சேவையின் வாயிலாகப் பேஸ்புக் இந்தியா வரலாறு காணாத வளர்ச்சியை அடைந்துள்ளதாக மார்க் ஜூக்கர்பெர்க் தனது நன்றி கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
ஆசிய சந்தை
பேஸ்புக் நிறுவனத்தின் டாப்லைன் மதிப்பு டிசம்பர் மாத காலாண்டில் மட்டும் சுமார் 51 சதவீதம் உயர்ந்து 8.81 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது.
மேலும் நிறுவனத்தின் ஒட்டுமொத்த வர்த்தக வளர்ச்சிக்கு ஆசிய சந்தை மிகப்பெரிய அளவில் உதவியது, குறிப்பாக இந்தியாவில் ஜியோ என்னும் டெலிகாம் நிறுவனம் அளித்த இலவச இண்டர்நெட் வாயிலாகவே ஆசிய சந்தை அதிகளவிலான வளர்ச்சியை அடைந்துள்ளது எனப் பேஸ்புக் சீஎப்ஓ டேவில் வெயினர் தெரிவித்துள்ளார்.
பங்கு மதிப்பு
பிப்ரவரி 2,2016ஐ ஒப்பிடும் போது பேஸ்புக் நிறுவனத்தின் பங்கு மதிப்பு 13 சதவீதம் உயர்ந்து தற்போது 130.84 டாலராக உள்ளது.
பயனாளர்கள்
இன்றைய நாள் வரை பேஸ்புக் தளத்தில் சுமார் 1.9 பில்லியன் வாடிக்கையாளர்கள் உள்ளனர், இதில் 1.2பில்லியன் வாடிக்கையாளர்கள் தினமும் பேஸ்புக் தளத்தைப் பயன்படுத்தி வருகின்றனர்.
இந்தியாவில்...
இந்தியாவில் பேஸ்புக் வாடிக்கையாளர் எண்ணிக்கை 160 மில்லியன், அமெரிக்காவை அடுத்து பேஸ்புக் நிறுவனத்திற்கு அதிக வாடிக்கையாளர்களைக் கொண்டிருப்பது இந்தியா.
மொபைல் விளம்பரம்
கடைசியாகப் பேஸ்புக் நிறுவனத்தின் மொபைல் விளம்பரம் கடந்த வருடத்தை ஒப்பிடும் போது சுமார் 53 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. இதன் மூலம் டிசம்பர் காலாண்டில் மட்டும் இந்நிறுவனத்தின் வருவாய் 56. பில்லியன் டாலரில் இருந்து 8.6 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது.


Click it and Unblock the Notifications