இன்போசிஸ் நாராயணமூர்த்தி அதிக இந்தியர்களை அது போன்ற நாடுகளுக்கு அனுப்புவதை இந்திய நிறுவனங்கள் குறைக்க வேண்டும்.
இந்திய நிறுவனங்கள் பன்முகக் கலாச்சாரத்திற்கு மாற வேண்டும் என்றும் எச்1பி வசா பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும் என்றும் இன்ஃபோஸிஸ் நாராயணமூர்த்தி டிரம்பிற்கு ஆதரவு அளித்து அந்தர் பல்டி அடித்துள்ளார்.
இன்று தனியார் நிறுவனத்திற்குப் பேட்டி அளித்த இன்ஃபோஸிஸ் நாராயணமூர்த்தி அதிக இந்தியர்களை அது போன்ற நாடுகளுக்கு அனுப்புவதை இந்திய நிறுவனங்கள் குறைக்க வேண்டும் என்றும் உள் நாட்டினரை அதிகமாகப் பணிக்கு எடுக்க வேண்டும் என்றும் அமெரிக்க அதிபர் டிரம்ப் குறித்த கேள்வியின் போது தெரிவித்தார்.
இந்த மென்பொருள் நிறுவனங்கள் பன்முகக் கலாச்சாரத்திற்கு மாற வேண்டும். அமெரிக்காவில் அமெரிக்கர்களையும், கனடாவில் கனடியர்களையும், பிரிட்டனில் பிரிட்டிஷ் மக்களையும் பணிக்குத் தேர்வு செய்ய வேண்டும் என்றும் அவர் கூறினார். இப்படிச் செய்தால் மட்டும் தான் முழுமையான பன்னாட்டு நிறுவனமாக மாற முடியும் என்றும் எனவே எச்-1பி விசாவை பயன்படுத்தி இந்தியர்களை வெளிநாடுகளுக்கு அனுப்புவதைத் தவிர்க வேண்டும் என்றும் நாராயணமூர்த்திக் கூறினார். வேலைக்கு ஆட்கள் எடுப்பது உள்ளூரிலும், அவர்களுக்குப் பயிற்சி அளிக்க இந்தியர்களையும் பயன்படுத்திக்கொள்ளலாம் என்றும் அவர் தெரிவித்தார். எச்-1பி விசா புதிய சட்டம் நிறைவேற்று அதிகார ஆணை வருகின்ற போது இந்திய நிறுவனங்கள் பன்முகக் கலாச்சாரத்திற்கு மாறும் என்றும் அதற்கு ஏற்றவாறு நாங்களும் மாறுவோம் என்றும் அதற்கான சிறந்த முயற்சியே இது என்று கருதுவதாதகுவும் நாராயணமூர்த்திக் கூறினார். இந்தியர்கள் எதையும் எளிதாக எடுத்துக்கொள்ளக் கூடியவர்கள், ஆனால் பன்முகக் கலாச்சாரம் அவ்வளவு எளிதல்ல. இதற்காக நிர்வாகிகள் எப்படிச் சிறப்பான முயற்சிகளை எடுக்க வேண்டும், இதுவும் கற்றுக்கொள்வதற்கான ஒரு வாய்ப்பு தான் என்றும், இந்திய நிறுவனங்கள் அரசின் சிக்கலை உணர்ந்து ரிஸ்க்கை தவிர்த்துக் குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறினார். எச்-1பி விசா என்பது தற்காலிக குடியேற்ற விசா ஆகும். இதனைப் பயன்படுத்தி அமெரிக்க நிறுவனங்கள் வெளிநாட்டில் இருந்து ஊழியர்களைச் சில முக்கியப் பணிக்கு எடுத்துக்கொள்ள இயலும், ஆனால் அமெரிக்கர்களுக்கு முன்னுரிமை அளித்த பிறகு தான் வெளிநாட்டில் இருந்து ஒருவரைத் தேர்வு செய்ய வேண்டும். ஆனால் இந்திய ஐடி நிறுவனங்கள் வருடத்திற்கு 10,000 பேருக்கும் அதிகமாக எச்-1பி விசா மூலம் அமெரிக்காவில் பணிக்கு அழைத்துச் செல்கின்றனர். புதிய எச்-1பி விசா மசோதாவால் 1,30,000 டாலர்கள் சம்பளமாக அளிக்க வேண்டும். ஆனால் முன்பு 60,000 டாலர்கள் சம்பளம் அளித்தால் போதும் என்று இருந்தது. இந்த மசோதா அதிகமாக வெளிநாட்டு ஊழியர்களைப் பணிக்கு எடுப்பதைக் குறைப்பதற்காகவும், அமெரிக்கர்களின் வேலையை உறுதி செய்வதற்காகவும் அமல்படுத்த இருப்பது குறிப்பிடத்தக்கது.
பன்முகக் கலாச்சாரம்
பன்னாட்டு நிறுவனம்
கருத்து
இந்திய நிறுவனங்கள் பன்முகக் கலாச்சாரத்திற்கு மாறும்
கற்றுக்கொள்வதற்கான ஒரு வாய்ப்பு
எச்-1பி விசா
புதிய எச்1பி விசா
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications