இந்தியர்களுக்கு தங்கம் மீது ஆர்வம் குறைந்துவிட்டதாம்.. அதிர்ச்சி ரிப்போர்ட்..!

2016-ம் ஆண்டில் 21% சதவீதம் வரை இந்தியர்களுக்குத் தங்கம் தேவைக் குறைந்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இதற்கு முக்கியக் காரணமாகத் தங்க ஆபரணத் தொழிலாளர்கள் வேலைநிறுத்தம், பான் கார்டு தேவை, செல

உலகம் முழுவதும் உள்ள எல்லா நாடுகளிலும் தங்கத்தின் தேவை எப்படி உள்ளது என்ற அறிக்கை ஒன்றை உலகத் தங்க கவுன்சில் வெளியிட்டுள்ளது.

அந்த அறிக்கையின் படி 2016-ம் ஆண்டில் 21% சதவீதம் வரை இந்தியர்களுக்குத் தங்கம் தேவைக் குறைந்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இதற்கு முக்கியக் காரணமாகத் தங்க ஆபரணத் தொழிலாளர்கள் வேலைநிறுத்தம், பான் கார்டு தேவை, செல்லா ரூபாய் நோட்டு அறிவிப்பு போன்றவையே என்று கூறப்படுகின்றது.

தங்கம் இறக்குமதி

தங்கம் இறக்குமதி

2015-ம் ஆண்டு 857.2 டன் தங்கம் இறக்குமதி செய்யப்பட்டது ஆனால் 2016-ம் ஆண்டு 21 சதவீதம் குறைந்து 675.5 டன் தங்கம் மட்டுமே இறக்குமதி செய்யப்பட்டுள்ளது என்று உலகத் தங்க கவுன்சில் தரவு கூறுகின்றது.

நகை தேவை

நகை தேவை

ஆபரண நகை தேவைக்கான தங்கமும் 2015-ம் ஆண்டு 662.3 டன்னாக இருந்தது, அதுவே 2016-ம் ஆண்டு 514 டன்னாகக் குறைந்துள்ளது. இதைப் பார்க்கும் போது நகை தேவை 12.3 சதவீதம் குறைந்துள்ளதையே காட்டுகின்றது.

சீசன் இருந்து விற்பனை குறைவு

சீசன் இருந்து விற்பனை குறைவு

2016-ம் ஆண்டின் நான்காம் காலாண்டில் தங்கத்தின் தேவை 3 சதவீதம் வரை குறைந்துள்ளதாகவும், தீபாவளி மற்றும் திருமணச் சீசன் இணைந்திருந்தாலும் தங்கம் விலை காரணமாகத் தேவைக் குறைந்துள்ளது.

மேலும் பான் கார்டு தேவை, நகை மீதான கலால் வரி, செல்லா ரூபாய் நோட்டுகள், வருமானம் வெளிப்படுத்தல் திட்டங்கள் போன்றவற்றால் தங்கத்தின் தேவைப் பாதிக்கப்பட்டுள்ளதாக உலகத் தங்க கவுன்சிலின் இந்திய நிர்வாக இயக்குநர் சோமசுந்தரம் பிஆர் கூறினார்.

 

பொருளாதாரம் வளர்ச்சி

பொருளாதாரம் வளர்ச்சி

இப்போது அரசு கொண்டு வந்துள்ள மாற்றங்களால் பொருளாதாரம் மேலும் வளர்ச்சி பெறும் என்று நம்புவதாகவும், கிராம மக்கள் ரூபாய் நோட்டுச் சிக்கலில் இருந்து முழுவதுமாக வெளிவரும் போது தங்கம் விற்பனை அதிகரிக்கும் என்று கருதுவதாகவும் அவர் தெரிவித்தார்.

2017-ம் ஆண்டின் மீதான எதிர்பார்ப்பு

2017-ம் ஆண்டின் மீதான எதிர்பார்ப்பு

சரக்கு மற்றும் சேவை வரி வருகின்ற ஜூன் மாதம் முதல் அமலுக்கு வருவதினால் 2017-ம் ஆண்டில் 650 முதல் 750 டன் வரை தங்கம் மீதான தேவை இருக்கும் என்றும் சோமசுந்தரம் தெரிவித்தார்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+