வாணி கோலா வயது 52
வாணி கோலா வயது 52

யார் இவர்:
கல்லாரி கேபிடல் பார்ட்னர் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர்
கல்வித் தகுதி:
எம்.இ, அரிசோனா பல்கலைக்கழகம், (எலக்ட்ரிக்கல் எஞ்சினியரிங்), பி.இ. ஒஸ்மானியா பல்கலைக்கழகம்
விருப்பம்: மரத்தான் போட்டிகளில் ஓடுவது
இவரது சிறப்பு
சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்காக உரக்கக் குரல் கொடுக்கும் நபர்களில் ஒருவர் வாணி கோலா. கடந்த சில ஆண்டுகள் வாணி கோலாவிற்குச் சிறப்பான ஆண்டாக அமையவில்லை. வாணி போர்டு உறுப்பினர்களில் ஒருவராக இருக்கும் ஸ்னாப்டீல் என்ற இ-காமர்ஸ் நிறுவனம், தற்போது போட்டிகள் நிறைந்த இகாமர்ஸ் போரைச் சந்தித்து வருகிறது.
மேலும் இவர் முதலீடு செய்த இன்னொரு உள்ளாடை நிறுவனமான ஜிவாமி என்ற நிறுவனமும் இதுவரை நல்ல லாபத்தைக் கொடுத்து வந்த நிலையில் தற்போது இந்நிறுவனமும் கடுமையான சோதனைகளைச் சந்தித்து வருகிறது.
இன்னமும் அவர் அதில் அதிகப் பணம் முதலீடு செய்ய வேண்டிய நிலையில் உள்ளார். கடந்த 2015ஆம் ஆண்டு $290 மில்லியன் டாலர் முதலீடு செய்த நிலையில் வருங்காலத்தில் அவரும் அவருடைய பார்ட்னர்களான ராஜேஷ் ராஜூ, பாலா ஸ்ரீனிவாசா, சுமித் ஜெயின் ஆகியோர் தங்கள் வெற்றியை உறுதி செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications