உயர் அதிகாரிகளுக்குச் சம்பள உயர்வே கிடையாது இதுதான் டெக் மஹிந்திரா நிறுவனத்தில் தற்போது நடக்கும் கூத்து..!
பெங்களுரூ: ஐடி நிறுவனங்களின் வர்த்தகம் அமெரிக்கா மற்றும் பிரிட்டன் சந்தையில் மிகப்பெரிய பாதிப்புகளைச் சந்தித்துள்ளதால், இந்தியாவில் இருக்கும் பல மென்பொருள் நிறுவனங்கள் ஊழியர்களைப் பணிநீக்கம் செய்து வருவது ஒருபுறம் இருக்க, மறுபுறம் பெரிய நிறுவனங்கள் ஊழியர்களைச் சம்பள உயர்வில் கைவைத்துள்ளது.
6 மாத சம்பள உயர்வு கட், உயர் அதிகாரிகளுக்குச் சம்பள உயர்வே கிடையாது இதுதான் டெக் மஹிந்திரா நிறுவனத்தில் தற்போது நடக்கும் கூத்து..!
டெக் மஹிந்திரா
நாட்டின் முன்னணி மென்பொருள் நிறுவனங்களில் ஒன்றான டெக் மஹிந்திரா, ஊழியர்களின் 2017ஆம் ஆண்டுக்கான சம்பள உயர்வில் மிகப்பெரிய மாற்றத்தைச் செய்துள்ளது.
சம்பள உயர்வு
பொதுவாக டெக் மஹிந்திரா நிறுவனம் தனது ஊழியர்களுக்கான சம்பள உயர்வை ஜனவரி முதல் அமலுக்குக் கொண்டு வந்து மார்ச் மாதத்தில் புதிய சம்பளத்தை அளிக்கும். ஆனால் இம்முறை ஜூலை மாதம் வரை ஒத்திவைக்க டெக் மஹிந்திரா நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
முன்பு மார்ச் மாதத்தில் அளிக்கப்படும் சம்பள உயர்வுடன் ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதத்திற்கான நிலுவை சம்பளத்தைச் சேர்த்து அளிக்கும், ஆனால் இம்முறை 6 மாதத்திற்கு அதாவது ஜூலை மாதத்தில் அளிக்கப்படும் சம்பளத்தில் நிலுவை தொகை அளிக்கப்படாது என அறிவித்துள்ளது.
உயர் அதிகாரிகள்
மேலும் டெக் மஹிந்திரா நிறுவனத்தில் U4/P1/P2 பேண்ட் பிரிவில் இருக்கும் உயர் அதிகாரிகளுக்கு 2017இன் முதல் அல்லது இரண்டாவது காலாண்டில் நிர்வாக கூட்டம் முடியும் வரை சம்பள உயர்வு அளிக்கப்படுவது குறித்த முடிவுகள் எடுக்கப்படும் என டெக் மஹிந்திரா நிர்வாகம் தெரிவித்துள்ளது
இதன் மூலம் இந்நிறுவன ஊழியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பதவி உயர்வு
இந்நிறுவனத்தில் இருக்கும் ஊழியர்களின் பதவி உயர்வு குறித்த ஆணைகள் அனைத்தும் மார்ச் 1ஆம் தேதிமுதல் துவங்கும் என்று அவை ஜனவரி 1ஆம் தேதியில் இருந்து நடைமுறைக்கு வர உள்ளதாகவும் உயர் அதிகாரிகளுக்கு நிர்வாகம் அனுப்பிய மின்னஞ்சலில் குறிப்பிட்டு இருந்தது.
ஆனால் சம்பள உயர்வு ஜூலை மாதத்தில் தான் கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊழியர்கள் கதறல்...
அமெரிக்க மற்றும் ஐரோப்பிய சந்தையில் ஏற்பட்டுள்ள பிரச்சனைகளால் சம்பள உயர்வின் அளவு குறைவாக இருக்கும் என்றே எதிர்பார்த்தோம், ஆனால் 6 மாத்திற்குச் சம்பள உயர்வை நிர்வாகம் அளிக்காதது மோசமான முடிவு எனப் பல ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.
விவாதம்
மேலும் டிசம்பர் மாதத்திலேயே அளிக்கப்படும் சம்பள மற்றும் பதவி உயர்வு ஆணைகள் இன்று வரை அளிக்கப்படவில்லை, இதுகுறித்து ஊழியர்கள் உள்தகவல் பரிமாற்ற செயலிகள் மூலம் உயர் அதிகாரிகளைத் தொடர்ந்து கேட்டு வந்தனர். இதன் எதிரொலியாகவே நிர்வாகம் உயர் அதிகாரிகளுக்கு மட்டும் பரித்தியேகமாக இத்தகவல்களை அனுப்பியுள்ளது.
நிர்வாகம்
தற்போது கூறப்பட்டுள்ள முடிவுகள் அனைத்தும் நிர்வாகத்தின் விவாத படியிலேயே உள்ளது. முடிவுகள் உறுதியான பின்பு ஊழியர்கள் அனைவருக்கும் மாற்றங்கள் குறித்த தகவல்கள் அனுப்பப்படும் என டெக் மஹிந்திரா நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க வாடிக்கையாளர்கள்
இப்புதிய மாற்றங்கள் அனைத்தும் அமெரிக்க நிறுவனங்களை வாடிக்கையாளராக (Client) கொண்ட ஊழியர்களுக்கு மட்டும் தான் என்ற கருத்தும் டெக் மஹிந்திரா ஊழியர்கள் மத்தியில் கருத்து நிலவி வருகிறது.
செலவுகள் குறைப்பு
அமெரிக்காவில் ஹெச்-1பி விசா கட்டணங்கள் உயர்வு, கட்டுப்பாடுகள் என அனைத்தும் அதிகரித்துள்ள நிலையில் செலவுகளைக் குறைக்க டெக் மஹிந்திரா ஊழியர்களின் சம்பளத்தில் கைவைத்துள்ளது என இந்நிறுவனத்தின் உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பிரஷ்ஷர்கள்
நாட்டில் இருக்கும் அனைத்து ஐடி நிறுவனங்கள் பிரஷ்ஷர்கள் பணியில் அமர்த்துவதைக் குறைத்து வரும் நிலையில் டெக் மஹிந்திரா மட்டும் குறைக்க முடிவு செய்யவில்லை, 2017ஆம் ஆண்டில் தொடர்ந்து பிரஷ்ஷர்களை அதிகளவில் நியமிக்க முடிவு செய்துள்ளது.
காலாண்டு முடிவுகள்
2016 டிசம்பர் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில் டெக் மஹிந்திரா நிறுவனத்தின் வருவாய் 4 சதவீதம் உயர்ந்து 1.12 பில்லியன் டாலர் வரை உயர்ந்துள்ளது, அதேபோல் மொத்த லாபத்தின் அளவு 30.8 சதவீதம் வரை உயர்ந்து 126.3 மில்லியன் டாலராக உயர்ந்துள்ளது.
ஆகவே காலாண்டு முடிவுகளால் ஊழியர்கள் சம்பள உயர்வில் பாதிப்பு இல்லை என்பது இதன் மூலம் தெளிவாகிறது.

More From GoodReturns

இன்போசிஸ் தலையெழுத்தை மாற்றப்போகும் புது CEO.. சலில் பாரிக் நிலைமை என்ன..?

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?



Click it and Unblock the Notifications