இனி இந்தியாவில் மாத சம்பளம் வாங்கும் ஊழியர்கள், நிறுவனத்தின் வாயிலாகவோ அல்லது பிற வழிகளில் கிடைக்கும் அன்பளிப்புக்கு வரி செலுத்த வேண்டும்.
டெல்லி: இனி இந்தியாவில் மாத சம்பளம் வாங்கும் ஊழியர்கள், நிறுவனத்தின் வாயிலாகவோ அல்லது பிற வழிகளில் கிடைக்கும் அன்பளிப்புக்கு வரி செலுத்த வேண்டும்.
இப்புதிய மாற்றத்தை பட்ஜெட் அறிக்கையை அடிப்படையாகக் கொண்ட நிதியியல் மசோதா 2017இல் பகுதி 56 வருமான வரி சட்டத்தின் புதிய திருத்தமாகக் கொண்டு வரப்பட்டுள்ளது என மத்திய வருவாய் துறை செயலாளர் ஹஷ்முக்த் ஆதியா தெரிவித்துள்ளார்.

அன்பளிப்புக்கு வரி
தனிநபர்கள் யாருக்கேனும் 50,000 ரூபாய்க்கு மேல் அன்பளிப்பு கொண்டுதால் அதற்கு வருமான வரி விதிக்கப்படுவது வழக்கம், ஆனால் அதுவே நிறுவனம் அளித்தால் அதற்கு வரி விதிக்கப்படாது இதுவே தற்போது நடைமுறையில் இருக்கும் விதிமுறைகள்.
இப்புதிய திருத்தத்தின் படி நிறுவனங்கள் அளிக்கும் அன்பளிப்பின் அளவு 50,000 ரூபாய்க்கு அதிகமாக இருந்தால் அவை வருமான வரி விதிப்புக்குள் அடங்கும்.
ரூ.50,000 வரை வரி இல்லை
தனிநபர்களுக்குத் தாங்கள் பணிபுரியும் நிறுவனத்தின் மூலம் அன்பளிப்புகளின் (பணம் மற்றும் பணமில்லா அன்பளிப்பு) அளவு வருடத்திற்கு 50,000 ரூபாய்க்கும் அதிகமாக இருந்தால் அதற்கு வருமான வரி செலுத்த வேண்டும்.
தடுப்பு
இப்புதிய விதிமாற்றத்தின் மூலம் நிறுவனங்கள் அன்பளிப்பு மூலம் அதிகளவிலான வருமானத்தைக் குறைப்பதை கண்காணிக்கவும், இதன் மூலம் செய்யப்படும் வரி ஏய்ப்பைத் தடுக்க முடியும்.
ஆனால் இப்புதிய விதிமாற்றத்தின் மூலம் தனிநபருக்கு கிடைக்கும் வரியில்லா வருமானம் பாதிக்கப்பட உள்ளது.
பணமில்லா அன்பளிப்பு
இந்தியாவில் பல முன்னணி நிறுவனங்கள் தங்களின் உயர் அதிகாரிகளுக்கு ஊக்குவிக்கும் வகையில் பணமில்லா அன்பளிப்பு பல லட்சங்களை வரி விலக்குப் பிரிவில் சேர்கிறது. தற்போது இவை அனைத்தும் முடக்கப்பட உள்ளது.
புதிய சட்டத்திலும் விலக்கு உண்டு
தற்போது நிதியியல் மசோதா 2017இல் கொண்டு வந்துள்ள புதிய மாற்றத்தில் நெருங்கிய உறவினர், திருமணத்திற்காகக் கிடைக்கும் அன்பளிப்பு, வாரிசு சொத்துக்கள் ஆகியவற்றின் கீழ் கிடைக்கும் அன்பளிப்புகளுக்குப் புதிய சட்டத்திலும் விலக்கு உண்டு.
தொடர் திருத்தங்கள்
மத்திய அரசு எவ்வளவு சட்டங்கள் கட்டுப்பாடுகள் கொண்டு வந்தாலும், மக்கள் அதனைப் பல குறுக்கு வழிகளில் பயன்படுத்தித் தொடர்ந்து வரி ஏய்ப்புச் செய்து வருகின்றனர்.
இதன் மூலம் இனி மத்திய அரசும் வருமான வரித்துறையும் தொடர்ந்து சட்டங்களில் திருத்தங்களைச் செய்து வர உள்ளது.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!



Click it and Unblock the Notifications