இந்தியாவில் விற்பனையாகும் மொத்த பயணிகள் வாகனங்களில் இரண்டில் ஒன்று மாருதி சுசூகி நிறுவனத்துடையது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா.
டெல்லி: இந்தியாவில் விற்பனையாகும் மொத்த பயணிகள் வாகனங்களில் இரண்டில் ஒன்று மாருதி சுசூகி நிறுவனத்துடையது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா.
உண்மைதான் 2017ஆம் ஆண்டின் ஜனவரி மாதத்தில் இந்திய சந்தையில் விற்பனையான மொத்த பயணிகள் வாகனங்களில் இரண்டில் ஒன்றாக உள்ளது. நடப்பு நிதியாண்டில் இது இரண்டாவது முறை என மாருதி சுசூகி தெரிவித்துள்ளது.
இந்நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த பெலெனோ, விட்டாரா பிரீசா ஆகிய வாகனங்கள் மக்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பைப் பெற்றது. மேலும் நாட்டில் தயாரிக்கப்பட்ட மாருதி சுசூகி வாகனங்களில் 50.4 சதவீத வாகனங்கள் ஜப்பான் நாட்டின் சுசூகி மோட்டார்ஸ் தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்டவை.

2016ஆம் நிதியாண்டில் சராசரியாகக் கார் விற்பனை சந்தையில் மாருதி சுசூகி நிறுவனத்தின் பங்கு 45.9 சதவீதமாக இருந்த நிலையில் நவம்பர் 2016இல் இதன் அளவு 52 சதவீதத்தை எட்டி வரலாறு காணாத ஆதிக்கத்தைச் செலுத்தியது.
இந்தியாவில் அதிகம் விற்பனை செய்யப்பட்ட கார் பிராண்டுகளில் மாருதி சுசூகி நிறுவனத்தின் தயாரிப்புகள் குறைந்தது 8 இடங்களைப் பிடித்துள்ளது.
ஜனவரி மாதத்தில் மட்டும் இந்நிறுவனத்தின் கார் விற்பனையின் அளவு சுமார் 26 சதவீதம் வரை உயர்ந்து காணப்படுகிறது. ஆனால் கார் விற்பனை சந்தையின் சராசரி வளர்ச்சி வெறும் 14.5 சதவீதம் மட்டும் தான்.
இதன் எதிரொலியாகத் திங்கட்கிழமை பங்குச்சந்தையில் இந்நிறுவனத்தின் பங்குகள் அதிகளவிலான வளர்ச்சியை அடைந்தது. இன்றைய வர்த்தகத்தில் இந்நிறுவனத்தின் பங்கு மதிப்பு 5.70 புள்ளிகள் உயர்ந்து 6,155.40 ரூபாயாக உள்ளது.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!



Click it and Unblock the Notifications