ஏற்கனவே உள்ள தரவு ரீசார்ஜ் பேக்குகளிலும் பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் 4 மடங்கு அதிகத் தரவுடன் சேவையை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக நிறுவன வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அரசு நடத்தும் தொலைத்தொடர்பு நிறுவனமான பிஎஸெனெல் 3ஜி மொபைல் பேக்குகள் விலையை மூன்றில் ஒரு பங்காகக் குறைத்து 36 ரூபாய்க்கு 1 ஜிபி தரவுடன் சேவையை அறிவித்துள்ளது.
ஏற்கனவே உள்ள தரவு ரீசார்ஜ் பேக்குகளிலும் பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் 4 மடங்கு அதிகத் தரவுடன் சேவையை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக நிறுவன வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தரவு பேக்குகள்
291 ரூபாய் ரீசார்ஜ் பேக்குகளில் 28 நாட்களுக்கு ஏற்கனவே இருக்கும் 2 ஜிபி தரவை உயர்த்தி 8 ஜிபி வரை பெற வாய்ப்புள்ளது. 78 ரூபாய்க்கு 2 ஜிபி தரவு பெறலாம்.
36 ரூபாய்க்கு 1 ஜிபி தரவை பிஎஸ்என்எல் அளிப்பதே மிகக் குறைவான விலை என்று தொலைத்தொடர்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஜியோ
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் 2017 மார்ச் 31-ம் தேதி வரை தினமும் 1 ஜிபி தரவை இலவசமாக வழங்கி வருகின்றது. இதுவே 1 ஜிபி தரவை பயன்படுத்திய பிறகு இண்டெர்னெட் வேகம் குறையும்.
பிற நிறுவனங்கள்
பிஎஸ்என்எல் நிறுவனத்தைத் தொடர்ந்து பிற நிறுவனங்களும் 50 ரூபாய்க்கும் குறைவாகத் தரவு பேக்குகளை அறிவித்து வருகின்றன.
வாடிக்கையாளர்கள்
பிஎஸ்என்எல் நிறுவனம் பிராட்பேண்ட் இண்டெர்னெட் செவையில் 9.95 மில்லியன் வாடிக்கையாளர்களுடன் முதல் இடத்திலும், 20.39 மில்லியன் வாடிக்கையாளர்களுடன் ஐந்தாவது இடத்திலும் உள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications