தற்போது வோடபோன் மற்றும் ஐடியா செல்லுலார் கூட்டணியின் குறித்த பேச்சுவார்த்தை ஏர்டெல் மட்டுமல்லாமல் ஜியோ நிறுவனத்தையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
இந்திய டெலிகாம் சந்தையில் ஏர்டெல், ஜியோ நிறுவனங்களுடன் போட்டி போட சரியான ஆள் இல்லாத காரணத்தால் ஏர்டெல் சந்தையின் சராசரி அளவுகளை விடவும் அதிகக் கட்டணத்தை வசூல் செய்து வந்தது.
ஜியோ அறிமுகத்தில் ஏர்டெல் நிறுவனத்தின் அஸ்திவாரமே ஆடிப்போன நிலையில், தற்போது வோடபோன் மற்றும் ஐடியா செல்லுலார் கூட்டணியின் குறித்த பேச்சுவார்த்தை ஏர்டெல் மட்டுமல்லாமல் ஜியோ நிறுவனத்தையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
ஆனால் இப்புதிய கூட்டணி பேச்சுவார்த்தையில் ஐடியா நிறுவனத்திற்குப் புதிய சிக்கல் எழுந்துள்ளது.
ஐடியா செல்லுலார் மற்றும் வோடபோன் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தை இரு நிறுவனங்கள் மத்தியிலும் உறுதியான நிலையில், புதிதாக அமைக்கப்படும் கூட்டணியில் இரு நிறுவனங்களும் சரிசமமான பங்குகளையும் உரிமைகளையும் பெற ஐடியாவின் ஆஸ்தான நிறுவனமான ஆதித்யா பிர்லா குழுமம் சுமார் 25,150 கோடி ரூபாய் முதலீடு செய்ய வேண்டிய சூழ்நிலையில் உள்ளது. 3.5 பில்லியன் டாலர் அதாவது 25,150 கோடி ரூபாய் முதலீடு செய்வதன் மூலம் இப்புதிய கூட்டணி நிறுவனத்தில் இரு நிறுவனங்களும் தலா 37.5 சதவீத பங்குகளைப் பெறும். ஆனால் ஆதித்யா பிர்லா குழுமத்தினால் தற்போது 25,000 கோடி அளவிற்கு முதலீடு செய்ய முடியுமான என்பது சந்தேகமான ஒன்று. பிர்லா குழுமம் ஐடியா நிறுவனத்தில் முதலீடு செய்ய விருப்பம் இல்லையென்றால் வோடபோன் நிறுவனத்தின் பிரிட்டன் வர்த்தகத்தில் முதலீடு செய்து இந்திய பிரிவில் அதற்கான இடத்தைப் பெறவும் வோடபோன் ஆலோசனை கூறியுள்ளது. ஆனால் ஐடியா பிளான் வேற...! ஐடியா செல்லுலார் நிறுவனத்தில் ஆதித்யா பிர்லா குழுமத்தை தவிர Axiata என்ற மலேசிய டெலிகாம் குழுமம் முதலீடு செய்து இந்நிறுவனத்தில் மிகப்பெரிய பங்குகளைத் தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. இந்நிலையில் ஐடியா செல்லுலார் Axiata நிறுவனத்திடம் தனது பங்கு முதலீட்டு அளவுகளை 20 சதவீதம் வரை குறைக்க வலியுறுத்தியுள்ளது வருகிறது. இந்தப் பேச்சுவார்த்தை வெற்றி அடைந்தால் கூடப் பிர்லா குழுமத்திற்கு வெற்றி தான். வோடபோன் இந்தியாவிற்கு, இன்டஸ் டவர்ஸ் நிறுவனத்தில் இருக்கும் 42 சதவீத பங்கள் இல்லாமல் கணக்கிட்டால் நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய டெலிகாம் நிறுவனமாக உள்ளது இன்றைய நிலையில் வோடபோன் இந்தியா நிறுவனத்தின் மொத்த மதிப்பு 50,000 கோடி ரூபாய். பிப்ரவரி 3ஆம் தேதியின் படி ஐடியா செல்லுலார் நிறுவனத்தின் மதிப்பு 39,000 கோடி ரூபாய். 3வது இடத்தில் இருக்கும் ஐடியா செல்லுலார் நிறுவனத்தில் ஆதித்யா பிர்லா குழுமம் வெறும் 42 சதவீத பங்குகளைத் தான் வைத்துள்ளது. ஆனால் வோடபோன் இந்தியாவில் 100 சதவீத பங்குகளையும் வோடவோன் குழுமம் வைத்துள்ளது. இதுவே இந்தக் கூட்டணி பேச்சுவார்த்தையில் வோடபோன் நிறுவனத்தின் மிகப்பெரிய அளவில் ஆதிக்கம் செலுத்துகிறது. இப்புதிய கூட்டணியில் ஐடியா செல்லுலார் மற்றும் வோடபோன் ஆகிய நிறுவனங்கள் தலா 37.5 சதவீத பங்களைப் பெறும் என்று எச்எஸ்பிசி தெரிவித்துள்ளது, ஆனால் கிரெடிட் சூசி இருநிறுவனங்களும் 39 சதவீத பங்குகளைப் பெறும் எனத் தெரிவித்துள்ளது.
ரூ.25,000 கோடி தேவை..!
பங்கு உரிமை
மாற்று வழி
மலேசிய நிறுவனம்
வோடபோன்- ஐடியா
ஆதிக்கம்
பங்கீடு
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications