பிப்ரவரி 20-ம் தேதி முதல் சேமிப்புக் கணக்குகளில் இருந்து வாரத்திற்கு 50,000 ரூபாய் வரை பணம் எடுக்கலாம் என்று அறிவித்துள்ளது.
சென்னை: சேமிப்புக் கணக்குகளில் பணம் எடுப்பது குறித்து அறிவிப்பு வெளியிட்ட ஆர்பிஐ பிப்ரவரி 20-ம் தேதி முதல் சேமிப்புக் கணக்குகளில் இருந்து வாரத்திற்கு 50,000 ரூபாய் வரை பணம் எடுக்கலாம் என்று அறிவித்துள்ளது.

மேலும் 2017 மார்ச் 13-ம் தேதி முதல் நிபந்தனையின்றிப் பணம் எடுக்கலாம் என்றும் கூறியுள்ளது.
2017 பிப்ரவரி 1-ம் தேதி முதல் நடப்பு வங்கி கணக்கில் இருந்து பணம் எடுக்க இருந்த கட்டுப்பாட்டை நீக்கியது, ஆணால் சேமிப்பு வங்கி கணக்குகளில் இருந்து பணம் எடுப்பது 24,000 ரூபாயாகவே இருந்து வந்தது.
500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று நவமபர் 8-ம் தேதி அறிவித்த பிறகு இருந்த பணத் தட்டுப்பாடு இப்போது ஓர் அளவு குறைந்துள்ளதை அடுத்து ஆர்பிஐ இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
நவம்பர் மாதம் நடைபெற்ற இந்தச் செல்லா ரூபாய் நோட்டுகள் சிக்கலால் இந்தியா முழுவதும் மக்கள் ஏடிஎம் மற்றும் வங்கிகளில் நீண்ட வரிசையில் நிற்க நேர்ந்தது.


Click it and Unblock the Notifications