நிறுவன ஆளுமை மற்றும் பங்குதாரர் சார்பு செயற்திட்டங்களைச் செயல்படுத்த முடியும் என்பதற்கு ஏற்றவாறு ஒரு தலைவரை மாற்ற இருப்பதாக வெஞ்சர்பீட் அறிக்கை கூறுகின்றது.
சமூக வலைத்தளமான பேஸ்புக் நிறுவனத்தின் இயக்குனர்கள் குழுவில் இருந்து நிறுவனர் மார்க் ஜுக்கர்பெர்க் அவர்களை நீக்க வேண்டும் என்று பங்குதாரர்கள் கூறிவருகின்றனர்.
2012-ம் ஆண்டு முதல் இயக்குனர்கள் குழுவில் உள்ள ஜுக்கர்பெர்கினை நீக்கிவிட்டுச் சிறந்த நிறுவன ஆளுமை மற்றும் பங்குதாரர் சார்பு செயற்திட்டங்களைச் செயல்படுத்த முடியும் என்பதற்கு ஏற்றவாறு ஒரு தலைவரை மாற்ற இருப்பதாக வெஞ்சர்பீட் அறிக்கை கூறுகின்றது.
இதற்கான விதையைச் சம்ஆப்அஸ் என்ற பங்குதாரர்கள் குழுவே எடுத்துள்ளதாகக் கூறப்படுகின்றது. சம்ஆப்அஸ் என்பது இணையதளக் குழுவாகும், இது நிறுவனங்களில் உள்ள மிகப் பெரிய பிரச்சனைகளின் கணக்கு, ஊழியர்களின் உரிமை, ஊழல் போன்றவற்றைக் கண்காணிக்கும் பிரிவு ஆகும்.
இண்டெல் நிறுவனத்தின் முன்னால் தலைவர் கருத்து
இண்டெல் நிறுவனத்தின் முன்னால் தலைவர் ஆண்ட்ரூ குரோவ் இது பற்றிக் கூறுகையில் இரண்டு வேலையாகப் பிரிப்பது நிறுவனத்தின் இதயம் போன்றது. சிஈஓ என்றால் ஒரு நிறுவனத்தின் ஊழியரா அல்லது சிஈஓ-க்கு நிழல் நிறுவனமா..? சிஈஓ ஊழியர் என்றால் அவருக்கு முதலாளி தேவை, இயக்குனர்கள் குழு முதலாளியாக இருப்பார்கள், தலைவர் இயக்குனர்கள் குழுவை இயக்குவார். எனவே சிஈஓ எப்படி முதலாளியாக இருக்க முடியும்? என்று கேட்டுள்ளார்.
நீக்க வேண்டும் என்று மனு
வெஞ்சர்பீட் அறிக்கை வெளிவரக் காரணமாக 3,33,000 நபர்கள் மார்க் ஜுக்கர்பெர்க்-ஐ இயக்குனர் குழுவில் இருந்து நீக்க வேண்டும் என்று மனு தாக்கல் செய்யப்பட்டதே ஆகும். இதில் குறிப்பிட வேண்டியது என்னவென்றால் 1,500 பேரிடம் மட்டும் தான் அதிகப்படியான பங்குள் உள்ளன.
பேஸ்புக் நட்டம்
இதனால் பேஸ்புக் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் சிஈஓ மார்க் ஜுக்கர்பெர்க்கிற்கு மிகப் பெரிய சிக்கல் ஏற்பட்டுள்ளது. மேலும் இது போன்ற மிகப் பெரிய முடிவை எடுக்கக் காரணம் மிகப் பெரிய சமூக வலைத்தளமான பேஸ்புக் இப்போது நட்டம் அடைந்து வருவதாகவும் கூறப்படுகின்றது.
பொறுப்புகள் ஒருவரிடமே என்பதால் பாதிப்பு
இரண்டு பொறுப்புகள் ஒருவரிடமே இருப்பது நிறுவனத்தின் வளர்ச்சியைப் பாதிக்கும் வகையில் இருப்பதாகவும், பங்குதாரர்களின் மதிப்பைப் பாதிக்கும் என்றும் வெஞ்சர்பீட் கூறியுள்ளது.
விமர்சனம்
மேலும் ஒற்றைக் குழு தலைமை பேஸ்புக் நிறுவனத்தில் இருப்பதினால் தவறாக வழிநடத்தும் செய்தி, தணிக்கை, வெறுக்கத்தக்கப் பேச்சு, பேஸ்புக் பயன்பாட்டில் கூறப்படும் குறைபாடுகள், சமூக வரையறைகளைப் வழிகாட்டுதல்கள் மற்றும் உள்ளடக்கக் கொள்கைகளால் பெரிதளவில் விமர்சனம் செய்யப்பட்டு வருகின்றது என்ற்ம் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆப்பிள்
இதே போன்று ஒரு முறை ஆப்பிள் நிறுவனத்தில் இருந்து ஸ்டீவ் ஜாப்ஸ் வெளியேற்றப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. இதே போன்று இந்தியாவின் பிளிப்கார்ட் நிறுவனர்களுக்கும் அதிகாரம் இல்லாத பதவிகள் அளிக்கப்பட்டுள்ளது.
சிக்காVsமூர்த்தி
More From GoodReturns

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

முதலிடத்தில் விஜய், இரண்டாமிடத்தில் ஸ்டாலின் – அப்போ எடப்பாடி பழனிசாமி , சீமான்?

அண்டார்டிகாவில் மறைந்து கிடக்கும் தங்கப் புதையல்!! இந்த நாடுகளுக்கெல்லாம் ஜாக்பாட்!!



Click it and Unblock the Notifications