பட்ஜெட்-க்குப் பின் நடக்கும் முதல் நாணய கொள்கை கூட்டம் என்பதால் நாட்டின் வளர்ச்சியை மேம்படுத்த ரிசர்வ் வங்கி கண்டிப்பாக 0.25 சதவீதம் வட்டியைக் குறைக்கும் எனப் பல தரப்பினர் எதிர்பார்த்த நிலையில், வட்டி விகிதத்தில் மாற்றம் இருக்காது எனத் தமிழ் குட்ரிட்டன்ஸ் கணித்திருந்தது.
இக்கணிப்பை உறுதி செய்யும் வகையில் இன்று நடத்து முடிந்த இருமாத நாணயகொள்கை கூட்டத்தில் ஆர்பிஐ கவர்னர் உர்ஜித் பட்டேல் தலைமையிலான நாணய கொள்கை அமைப்பு வட்டி விகிதத்தைக் குறைக்கவில்லை.

இதன் மூலம் ரெப்போ விகிதம் தற்போது இருக்கும் 6.25 சதவீதம் என்ற நிலையிலேயே அடுத்த 2 மாதங்களுக்குத் தொடரும்.
இதுமட்டும் அல்லாமல் 2018ஆம் நிதியாண்டில் நாட்டின் வளர்ச்சியை அடைய வேண்டும் என்பதால் ஏற்கனவே 6 வருடச் சரிவில் இருக்கும் ரெப்போ விகித்தை குறைக்க வேண்டாம் என நாணய கொள்கை அமைப்பு எவ்வித வாக்குவாதங்கள் இன்றி ஒருமனதாக முடிவு செய்துள்ளது.
மேலும் எம்எஸ்எப் விகிதம் 6.75 சதவீதமாகவும், சிஆர்ஆர் விகிதம் 4 சதவீதமாகத் தொடரும்.


Click it and Unblock the Notifications