ரிசர்வ் வங்கி வட்டியை குறைக்காது.. அடித்துச் சொல்கிறார் இந்த வல்லுனர்..!

பிப்ரவரி 1ஆம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட பின் முதல் முறையாக நடக்கும் இருமாத நாணய கொள்கை கூட்டம் என்பதால் வர்த்தகச் சந்தை மட்டும் அல்லாமல் மக்கள் மத்தியிலும் முக்கியத்துவம் அடைந்துள்ளது.

மும்பை: பிப்ரவரி 1ஆம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட பின் முதல் முறையாக நடக்கும் இருமாத நாணய கொள்கை கூட்டம் என்பதால் வர்த்தகச் சந்தை மட்டும் அல்லாமல் மக்கள் மத்தியிலும் முக்கியத்துவம் அடைந்துள்ளது.

இந்நிலையில், ஏற்கனவே 6 வருடக் குறைவாக இருக்கும் வட்டி விகத்தைத் தற்போது நடைபெற்று வரும் நாணய கொள்கை கூட்டத்தில் கண்டிப்பாகக் குறைக்கப்படாது என அடித்துச் சொல்கிறார் மோல் ஹாவ்.

பயன் பெறாது

பயன் பெறாது

கச்சா எண்ணெய் தேவையை இறக்குமதி மூலம் மட்டும் அதிகளவில் தீர்த்து வரும் இந்திய பொருளாதாரத்திற்குத் தற்போது இருக்கும் வட்டி விகிதத்தைக் குறைத்தால், பயன் அளிக்காது.

இந்தியாவில் தற்போது நுகர்வோர் பொருட்கள் விலை மிகவும் அதிகமாக உள்ளது, அமெரிக்காவின் புதிய கொள்கைகள் மூலம் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு மிகப்பெரிய அளவிலான மாற்றத்தை எதிர்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.

 

வட்டி குறைப்பு இருக்காது.

வட்டி குறைப்பு இருக்காது.

இந்நிலையில் புதன்கிழமை நிறைவடையும் இருமாத நாணய கொள்கையின் கூட்டத்தில் உர்ஜித் பட்டேல் தலைமையிலான ரிசர்வ் வங்கி கண்டிப்பாக வட்டி விகிதத்தைக் குறைக்காது என மோல் ஹாவ் கூறியுள்ளார்.

மோல் ஹாவ்

மோல் ஹாவ்

ஹாங்காங் தலைமையாகக் கொண்டு இயங்கும் பிஎன்பி பிரிபாஸ் நிறுவனத்தின் பொருளாதார வல்லுனராகப் பணியாற்றி வருகிறார் மோல் ஹாவ்.

கடந்த 2 வருடமாக ரிசர்வ் வங்கியின் வட்டி மாற்றங்களைத் துல்லியமாகக் கணித்து வெளியிட்டு வருகிறார் மோல் ஹாவ்.

 

பத்திர முதலீடு

பத்திர முதலீடு

இந்தியா-அமெரிக்க வர்த்தகச் சந்தையில் ரூபாய் பத்திர முதலீடுகள் 2013ஆம் ஆண்டுக்குப்பின் மிகப்பெரிய அளவில் குறைந்து வருகிறது.

மேலும் அமெரிக்காவில் தற்போது அமைந்துள்ள டொனால்டு டிரம்ப் தலைமையிலான அரசு இந்தியா உடனான வர்த்தகத்தைப் பாதிக்கும் பல திட்டங்களையும், சட்டங்களையும் இயற்றி வருகிறது.

 

ப்ளூம்பெர்க்

ப்ளூம்பெர்க்

சர்வதேச பொருளாதாரம் மற்றும் வர்த்தகச் சந்தையைத் தொடர்ந்து கவனித்து வரும் ப்ளூம்பெர்க் நிறுவனத்தில் 33 பொருளாதார வல்லுனர்களில் 30 பேர் பட்ஜெட் அறிவிப்புகளைக் கருத்தில் கொண்டு ஆர்பிஐ தற்போது இருக்கும் 6.25 சதவீதம் என்ற வட்டி விகிதத்தை 6 சதவீதமாக அறிவிக்கும் எனத் தெரிவித்துள்ளனர்.

ரிசர்வ் வங்கி வட்டியை குறைக்காது.. அடித்துச் சொல்கிறார் இந்த வல்லுனர்..!

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+