இந்தியாவின் மிகச்சிறந்த ஆடம்பர ஹோட்டல்: தி லீலா பேலஸ்

சுற்றுலாப் பயணிகளுக்கான பயண ஏற்பாடுகளைச் சிறப்பாகச் செய்து வரும் டிரிப் அட்வைசர் நிறுவனம் ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவின் சிறந்த பத்து ஹோட்டல்களைத் தேர்வு செய்து 'டிராவல்லர்ஸ் சாய்ஸ்' என்ற விருது கொடுத்து

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: சுற்றுலாப் பயணிகளுக்கான பயண ஏற்பாடுகளைச் சிறப்பாகச் செய்து வரும் டிரிப் அட்வைசர் நிறுவனம் ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவின் சிறந்த பத்து ஹோட்டல்களைத் தேர்வு செய்து 'டிராவல்லர்ஸ் சாய்ஸ்' என்ற விருது கொடுத்து வருகிறது.

 

அந்த வகையில் இந்த ஆண்டு இந்த விருதைப் பெற ஆடம்பரமான ஹோட்டல்களுக்கு மக்கள் மத்தியில் மதிப்பு உள்ளதாக அமைந்துள்ளது. இந்தியாவில் ஹாஸ்பிடாலிடி துறையின் வளர்ச்சி உச்சம் அடைந்துள்ள இத்தருணத்தில் நாட்டின் டாப் 10 ஆடம்பர ஹோட்டல்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ள இவை அழகில் மட்டுமல்ல வர்த்தகத்திலும் உச்சம்.

இந்த விருது இந்தியாவின் முன்னணி ஹோட்டல்களுக்குக் கிடைக்கும் லட்சக்கணக்கான விமர்சனங்கள் மற்றும் கருத்துக்களின் அடிப்படையில் கொடுக்கப்படும் விருது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் 2017ஆம் ஆண்டின் சிறந்த ஹோட்டல்களைத் தற்போது பார்ப்போம்

தி லீலா பேலஸ் (The Leela Palace) உதய்பூர்:

தி லீலா பேலஸ் (The Leela Palace) உதய்பூர்:

ஆரவல்லி ஹில்ஸ் மற்றும் உதய்பூரின் அரண்மனை ஆகியவற்றின் அற்புதமான அழகை ஓட்டலின் அறையில் இருந்தே பார்க்கும் வகையில் அமைந்துள்ள இந்த ஹோட்டல் உண்மையில் சுற்றுலா பயணிகளின் சொர்க்கம் எனலாம். பார்வைக்கு மிகவும் அழகாய், அதே நேரத்தில் உள்ளே மிகவும் ஆடம்பரமாக அமைக்கப்பட்டுள்ள இந்த ஹோட்டல் உதய்பூரின் மிகப்புகழ் பெற்ற ஹோட்டல் ஆகும்.

இந்த ஹோட்டல் குறித்து ஒருவர் விமர்சிக்கையில், 'நீங்கள் இந்த ஓட்டலுக்குள் நுழைந்த அடுத்தக் கணம் மிகப்பெரிய சந்தோஷத்தையும் பெருமிதத்தையும் அடைவீர்கள்' என்று கூறியுள்ளார். இந்த ஹோட்டல் புத்தம் புதியதாக இருந்தாலும் அதில் உள்ள அம்சங்கள் ஒரு மகாராஜாவிற்கு உண்டான பகட்டை உணர முடியும்.

இந்த ஓட்டலில் ஒரு இரவு தங்குவதற்கான கட்டணம் ரூ.31,096 என்பது குறிப்பிடத்தக்கது.

 

 உமைத் பவான் அரண்மனை (Umaid Bhawan Palace) ஜோத்பூர்:
 

உமைத் பவான் அரண்மனை (Umaid Bhawan Palace) ஜோத்பூர்:

இந்தியாவில் உள்ள மிகப்பெரிய அரண்மனைகளில் ஒன்றாகவும், உலகில் உள்ள மிகப்பெரிய தனியார் தங்குமிடங்களில் ஒன்றாகவும் அமைந்துள்ள இந்த ஹோட்டல், 26 ஏக்கரில் பரப்பளவில் பச்சை பசேலென்ற தோட்டங்களுடன் அமைந்துள்ளது.

டிரிப் அட்வைசரில் இந்த ஹோட்டல் குறித்து விமர்சனம் செய்த ஒருவர், 'உமைத் பவான் அரண்மனைக்குள் நீங்கள் ஒருமுறை நுழைந்துவிட்டால் நீங்கள் சொர்க்கத்தினுள் நுழைந்தது போன்றே உணர்வீர்கள்' என்று கூறியுள்ளார். சொர்க்கத்திற்கு இணையாகக் கருதப்படும் இந்த ஓட்டலின் சுற்றுப்புறத்தில் அழகிய தோட்டங்கள், சிறப்பான கவனிப்பாளர்கள், புத்திசாலித்தனமான பணியாட்கள் ஆகியவை சுற்றுலாப் பயணிகளின் சிறப்பு அம்சங்களாக இருக்கின்றது.

இந்த ஓட்டலில் ஒரு இரவு தங்குவதற்கு ரூ.42,991 கட்டணமாகப் பெறப்படுகிறது.

 

தாஜ் லேக் அரண்மனை (Taj Lake Palace) உதய்பூர்:

தாஜ் லேக் அரண்மனை (Taj Lake Palace) உதய்பூர்:

மிதக்கும் பளிங்கு மாளிகையாக, நம்ப முடியாத வகையில் அமைந்துள்ள இந்தத் தாஜ் லேஜ் அரண்மனையின் பின்புறத்தில் ஆரவல்லி ஹில்ஸ் மற்றும் இந்நகரின் அரண்மனை வெகுசிறப்பாக அமைந்துள்ளது.

இதுவரை நான் பார்த்திராத மிகச்சிறந்த மேஜிக்கல் மற்றும் ரொமான்ஸ் ஆன இடம் இது என்று டிரிப் அட்வைசரின் விமர்சனமாக இந்த ஹோட்டல் பெற்றுள்ளது இதன் சிறப்பு ஆகும். சர்வீஸ், உணவு, வசதிகள் சூரியன் மறையும் நேரத்தில் படகு சவாரி மற்றும் ஸ்பா ஆகியவை மிகச்சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளது.

இந்த ஓட்டலில் ஒருநாள் இரவு தங்குவதற்கு ரூ.38,826 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

 

ஆரஞ்ச் கண்ட்ரி ரிசார்ட்ஸ் (Orange County Resorts) கூர்க்:

ஆரஞ்ச் கண்ட்ரி ரிசார்ட்ஸ் (Orange County Resorts) கூர்க்:

கூர்க்கில் உள்ள ஆரஞ்சு கண்ட்ரி என்று அழைக்கப்படும் ரிசார்ட் பகுதிக்குள் நீங்கள் நுழைந்துவிட்டால் நீங்கள் ஒரு உலகத்தில் இருந்து இன்னொரு உலகத்திற்கு மாறி வந்துவிட்டதாகவே உணர்வீர்கள்.

சொர்க்கம் என்ற தோட்டத்திற்குள் நீங்கள் நுழையும்போது அதில் காபி மற்றும் பிற பொருட்களின் போதை தரும் நறுமணத்தை உங்களால் ரசிக்காமல் இருக்க முடியாது. இது ஒரு பேரின்பமாக இடம். முழுமையான அமைதி, அதே நேரத்தில் ஆடம்பரம், அச்சு அசலான இயற்கையான சூழலில் ஒரு உன்னதமான இடம் என்று இந்த ரிசார்ட்டை டிரிப் அட்வைசரின் விமர்சகர் ஒருவர் கூறியுள்ளார்.

இந்த ஓட்டலில் ஒரு இரவு தங்குவதற்கு ரூ.31.839 கட்டணமாக வசூல் செய்யப்படுகிறது.

 

 தி ஓபராய் ராஜ்விலாஸ், (The Oberoi Rajvilas) ஜெய்ப்பூர்:

தி ஓபராய் ராஜ்விலாஸ், (The Oberoi Rajvilas) ஜெய்ப்பூர்:

ஜெய்ப்பூரின் முக்கியச் சுற்றுலா பகுதியான 18ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட சிவன் கோவிலைச் சுற்றி கட்டப்பட்டுள்ள இந்தத் 'தி ஓபராய் ராஜ்விலாஸ் என்ற ஹோட்டல் விசித்திரமான அமைதி மற்றும் இயற்கையான அமைதியின் புகலிடமாக உள்ளது. இந்த ஓட்டலில் நுழையும்போது நீங்கள் ஒரு சிறந்த ஓட்டலில் நுழைந்த அனுபவத்துடன் நுழைவீர்கள்.

இங்கு உள்ள அறைகள், மைதானங்கள், ரெஸ்டாரெண்டுகள், குளஙம், ஸ்பா விளம்பர சேவைகள் ஆகியவற்றை நம்ப முடியாத ஆச்சரியத்தில் பார்ப்பீர்கள் என்று டிரிப் அட்வைசரின் விமர்சகர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்த ஓட்டலில் ஒருநாள் இரவு வாடகையாக ரூ.39,023 கட்டணமாக வசூல் செய்யப்படுகிறது.

 

 தி ஓபராய் அமர்விலாஸ் (The Oberoi Amarvilas) ஆக்ரா:

தி ஓபராய் அமர்விலாஸ் (The Oberoi Amarvilas) ஆக்ரா:

விடுமுறை காலச் சுற்றுலாப் பயணிகளுக்கு ஒரு அற்புதமான சொத்தாக இருப்பதுதான் இந்தத் தி ஓபராய் அமர்விலஸ். இந்த ஓட்டலின் அறைகள் ஒரு பாரமரிய கலையை மையமாகக் கொண்டு மிகவும் உன்னிப்பாக வடிவமைக்கப்பட்டு உள்ளது. ஆக்ராவிற்குச் செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு ஒரு மாணிக்கமாக இந்த அழகான ஹோட்டல் விளங்குகிறது.

நான் இதுவரை தங்கிய ஹோட்டல்களில் மிக அழகிய ஹோட்டல்களில் ஒன்றாக இதைக் கருதுகிறேன். இந்த ஹோட்டல் மற்றும் இதில் உள்ள மைதானங்கள் மிக அழகாகவும், அதைவிட இங்கிருந்து தாஜ்மஹாலை பார்க்கும் கொள்ளை அழகையும் வார்த்தையால் விவரிக்க முடியாது என்று டிரிப் அட்வைசரின் விமர்சகர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்ஹ ஓட்டலில் ஒருநாள் இரவு தங்குவதற்கு ரூ.48,534 கட்டணம் என்பது குறிப்பிடத்தக்கது.

 

ஆரஞ்சு கண்ட்ரி ரிசார்ட்ஸ் ( Orange County Resorts) காபினி, கர்நாடகா:

ஆரஞ்சு கண்ட்ரி ரிசார்ட்ஸ் ( Orange County Resorts) காபினி, கர்நாடகா:

ஒரு வனத்தின் அனுபவத்தை இந்த ஹோட்டல் கொடுக்கும் அளவுக்கு வேறு எந்த ஓட்டலும் கொடுக்க முடியாது என்று அடித்துக் கூறும் வகையில் அமைந்துள்ளதுதான் இந்த ஆரஞ்சு கண்ட்ரி ரிசார்ட்ஸ். இந்த ஓட்டலை வடிவமைக்கப் பழங்குடியினர் மிகவும் உதவிகரமாக இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கபினி நதியின் இரண்டு பக்கங்களிலும் எல்லையாக அமைந்துள்ள இந்த ரிசார்ட்ஸ்ஸின் வடிவமைப்பு அனைவராலும் ஈர்க்கப்படும் வகையில் உள்ளது. இந்த ரிசார்ட் ஒரு அழகான, ஒரு சரியான அமைப்பாக, உள்ளூர் இயற்கை, கட்டிடக் கலை மற்றும் கலாச்சாரத்தையும் கொண்டு உள்ளது. இதில் தங்குவதை விட வேறு எந்த வெகுமதியும் ஒரு சுற்றுலா பயணிக்குத் தேவை இல்லை என்று டிரிப் அட்வைசரின் விமர்சகர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்த ஓட்டலில் ஒருநாள் இரவு தங்க ரூ.28,798 வசூல் செய்யப்படுகிறது.

 

 வைல்ட் பிளவர் ஹால்( Wildflower Hall) , இமயமலையின் சிம்லா, ஹிமாச்சல் பிரதேசம்

வைல்ட் பிளவர் ஹால்( Wildflower Hall) , இமயமலையின் சிம்லா, ஹிமாச்சல் பிரதேசம்

இமயமலையின் அழகான காட்சிகள் பார்வையிடும் வகையிலும், அழகிய மணம் மற்றும் அடர்த்தியான காட்டில் அமைந்துள்ள ஹோட்டல்தான் வைல்ட் ஹால். ஒரு உண்மையான, விசித்திரமான ஆடம்பரமான ரிசார்ட்டாக இது உள்ளது. ஒவ்வொருவரும் கண்டிப்பாகப் பார்க்க வேண்டிய இயற்கையின் மடியில் தவழும் ஒரு ஆடம்பர அம்சமாக இந்த ஹோட்டல் உள்ளது என்று டிரிப் அட்வைசரின் விமர்சகர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்த ஓட்டலில் ஒருநாள் இரவு தங்குவதற்கு ரூ.21,925 வசூல் செய்யப்படுகிறது.

 

தி ஓபராய், (The Oberoi) பெங்களூர்

தி ஓபராய், (The Oberoi) பெங்களூர்

பசுமையான, வெப்பமண்டல மைதானத்தில் மலைகளுக்கிடையே மற்றும் லேட்டஸ்ட் தொழில்நுட்பம் பொருத்தப்பட்ட ஓட்டலாக ஐடி நகரமான பெங்களூரில் உள்ள ஓபராய் ஹோட்டல் பிரதிபலிக்கிறது. மிகச்சிறந்த விருந்தோம்பல் அனுபவம் ஒன்றை உங்களுடைய வாழ்க்கையில் நீங்கள் பெற வேண்டும் என்றால் பெங்களூர் ஓபராய் ஓட்டலில் சென்று தங்குங்கள். சிறந்த சூழல், நல்ல குளம் மற்றும் ஒரு பெரிய தோட்டத்தில் சூழல் ஆகியவை ஒருங்கே அமைந்தது இந்த ஹோட்டல் என்று டிரிப் அடவைசர் விமர்சகர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்த ஓட்டலில் ஒருநாள் இரவு தங்குவதற்கு ரூ. 12,278 கட்டணமாகப் பெறப்படுகிறது.

 

நமஹ், (Namah) உத்தர்காண்ட்

நமஹ், (Namah) உத்தர்காண்ட்

பசுமையால் சூழப்பட்ட ஒரு ஆடம்பரமான ரிசார்ட் என்று சொல்லப்படும் இந்த நமஹ், இயற்கையைக் காதலிக்குச் சுற்றுலாப் பயணிகளுக்கு ஒரு வரப்பிரசாதமாக உள்ளது. இது உலக வர்க்க வசதிகளுடன், கலையுணர்வுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது இந்த ரிசார்ட் தான்" என்று டிரிப் அட்வைசரின் விமர்சகர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்த ரிசார்ட்டில் ஒருநாள் இரவு தங்குவதற்கு ரூ.11,004 கட்டணமாக வசூல் செய்யப்படுகிறது.

 

இந்தியாவின் மிகச்சிறந்த ஆடம்பர ஹோட்டல்: தி லீலா பேலஸ்
தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

The top 10 best luxury hotels in India

The top 10 best luxury hotels in India
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X