2ஜி ஊழல் குற்றவாளிகளுடன் தொடர்பு.. ரூ.690 கோடி சொத்து.. தேர்தல் களம் காணும் பாஜக வேட்பாளர்..!

மும்பை கார்ப்ரேஷன் தேர்தலில் கட்கோப்பர் பகுதியில் பாஜக வேட்பாளராகப் போட்டியிடும் பராக் ஷா தனது சொத்து மதிப்பை 690 கோடி ரூபாய் எனக் கணக்கு காண்பித்து இருப்பது அனைவரையும் புருவம் உயர்த்த வைத்திருக்கின்ற

மும்பை கார்ப்ரேஷன் தேர்தலில் கட்கோப்பர் பகுதியில் பாஜக வேட்பாளராகப் போட்டியிடும் பராக் ஷா தனது சொத்து மதிப்பை 690 கோடி ரூபாய் எனக் கணக்கு காண்பித்து இருப்பது அனைவரையும் புருவம் உயர்த்த வைத்திருக்கின்றது.

எனவே இங்கு நாம் யார் இந்தப் பராக் ஷா, இவருக்கு உள்ள சொத்து விவரங்கள் பற்றி எல்லாம் விரிவாக இங்குப் பார்ப்போம்.

அரசியல் தொடர்பு

அரசியல் தொடர்பு

மகாராஷ்டிரா மாநிலத்தின் வீட்டு வசதி துறை அமைச்சர் பிரகாஷ் மேத்தாவிற்கு நெருக்கமானவர் என்று கூறப்படும் 47 வயதான ஷா அரசியலுக்குப் புதியவர் என்றாலும் இவருடைய சொத்து மதிப்பு தான் அனைவரையும் பேச வைத்துள்ளது.

தொழில்

தொழில்

ரியல் எஸ்டேட் வணிகம் செய்து வரும் ஷாவிற்குக் கட்டுமான நிறுவனங்கள் உள்ளன. இந்தக் கட்டுமான நிறுவனங்கள் மும்பை, குஜராத், சென்னை உள்ளிட்ட நகரங்களில் தனது வணிகத்தைச் செய்து வருகின்றது.

சொத்துக்கள்

சொத்துக்கள்

ஷா மற்றும் அவருடைய மனைவி இருவர் பெயரிலும் அசையும் சொத்தாக 670 கோடியும், அசையா சொத்தாகத் தானேவில் உள்ள வீடு, நிலம், விவசாய நிலம் என 20 கோடி ரூபாய்க்கு இருப்பதாகத் தனது சொத்து விவரங்களைத் தாக்கல் செய்துள்ளார். இவருடைய சொத்துக்கள் அனைத்தும் மும்பை மற்றும் குஜராத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

அசையும் சொத்துக்கள்

அசையும் சொத்துக்கள்

இவரிடம் உள்ள அசையும் சொத்துக்களில் வங்கி கணக்கு, டெபாசிட்ஸ், பங்குகள் மற்றுப் பாண்டுகள், வாகனங்கள், கடன் ஆகியவை உள்ளன. 507 கோடி ரூபாய்க்கு ஷாவிற்கும் அவரது மனைவிக்கும் பங்கு சந்தை, பாண்டு போன்றவற்றில் முதலீடுகள் உள்ளன.

தேர்தல் போட்டி

தேர்தல் போட்டி

பிரிஹான்மும்பை நகராட்சி கார்ப்பரேசனின் 2017-ம் ஆண்டுத் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் பிரிவின் செட்டாவிற்கு எதிராக ஷா களம் இறங்க இருக்கிறார்.

ஷா பேட்டி

ஷா பேட்டி

ஆங்கில நாளிதழுக்குப் பேட்டி அளித்த ஷா என்னிடம் அதிகப்படியாகச் சொத்து உள்ளதில் பெரிய ஆச்சர்யம் ஒன்றும் இல்லை, 22 வருடமாகக் கடின உழைப்பைப் போட்டுள்ளேன் அதன் மூலம் சம்பாதித்ததே இந்தச் சொத்துக்கள் என்றும் முதல் முறையாக நான் தேர்தலில் வேட்பாளராகப் பங்கேற்றாலும் நான் அரசியலுக்குப் புதிதல்ல தன்னுடைய கட்கோப்பர் பகுதியில் பல சமுகப் பணிகள் ஈடுபட்டுள்ளதாகவும் ஷா கூறுகின்றார்.

அசையா சொத்து

அசையா சொத்து

மும்பை மற்றும் தானேவில் இவருக்கும் இவருடைய மனைவிக்கும் 9 இடங்களில் சொத்து உள்ளன என்றும், தானேவில் மட்டும் 8.30 கோடி ரூபாய் மதிப்பளவில் 5,170 சதர அடியில் ஒரு வீடு இருப்பதாகவும் சொத்து மதிப்பில் ஷா குறிப்பிட்டுள்ளார்.

பணிகள்

பணிகள்

ரியல் எஸ்டேட் நிபுணர்கள் ஷா பற்றிக் கூறும் போது பாந்த் பகுதியில் மும்பையின் பெரிய மஹதா பிராப்ரட்டி உருவாக்கும் பணி இவருக்குக் கிடைத்துள்ளதாகவும், அது மட்டும் இல்லாமல் மிரா ரோடு மற்றும் முலுண்டு பகுதியிலும் 30 லட்சம் மற்றும் 12 லட்சம் சதுர அடியில் கட்டுமான பணி தொழிலில் ஈடுபட்டு உள்ளார் என்று கூறுகின்றனர்.

ஊழல் வாதிகளுடன் தொடர்பு

ஊழல் வாதிகளுடன் தொடர்பு

2ஜி ஸ்பெக்டர்ம் வழக்கில் தொடர்புள்ள ஷாஹித் பால்வா உடன் இவருக்குத் தொடர்பு உள்ளதாகவும் அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றனர். இதைப் பற்றி இவரிடம் கேட்டபொழுது அவர் என்னுடைய வாடிக்கையாளர்களில் ஒருவர் என்றும், நல்ல நன்பர் என்றும் ஆனால் அதைத் தவிர வேறு தொடர்பு ஏதும் இல்லை என்றும் ஷா கூறினார்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+